இந்தியாவை சூறையாடிய முகலாய மன்னர்களை போற்றுவதா? #UninstallHotstar-ஐ டிரெண்ட் செய்யும் நெட்டிசன்கள்!

மும்பை: டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இன்று வெளியான தி எம்பயர் எனும் வெப் தொடருக்கு எதிராக ஏகப்பட்ட நெட்டிசன்கள் கொதித்தெழுந்துள்ளனர்.

அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸை தொடர்ந்து டிஸ்னி ஹாட் ஸ்டாரையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் வைத்து வருகின்றனர்.

முகலாய மன்னர் பாபர் தொடங்கி அவுரங்கசிப் வரையிலான அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்த வெப் தொடருக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

தி எம்பயர்

தி எம்பயர்

அலெக்ஸ் ரூதர்ஃபோர்ட் எழுதிய எம்பயர் ஆஃப் தி மொகல்ஸ் எனும் நாவலை தழுவி இயக்குநர் மிதாக்‌ஷாரா குமார் இயக்கி உள்ள தி எம்பயர் வெப் தொடர் இன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக தொடங்கியது. இதில் பாலிவுட் நடிகர் குணால் கபூர் பாபராக நடித்துள்ளார். ஷபானா ஆஸ்மி, திராஷ்டி தாமி, வேதாளம் வில்லன் ராகுல் தேவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சஞ்சய் லீலா பன்சாலி சிஷ்யன்

சஞ்சய் லீலா பன்சாலி சிஷ்யன்

பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் உதவி இயக்குநரான மிதாக்‌ஷரா குமார் பிரம்மாண்டமாக சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் படம் போலவே இந்த வெப்சீரிஸை உருவாக்கி உள்ளார்.

வெடித்தது சர்ச்சை

வெடித்தது சர்ச்சை

சமீபத்தில் நடிகை கரீனா கபூர் தனது மகன்களுக்கு தைமூர் மற்றும் ஜெஹாங்கிர் என முகலாய மன்னர்களின் பெயரை வைத்ததற்கே கொதித்தெழுந்த நெட்டிசன்கள் தற்போது முகலாய மன்னர்கள் குறித்த வெப்சீரிஸை வெளியிட்டுள்ள டிஸ்னி ஹாட்ஸ்டாருக்கு எதிராக போர்க்கொடியை உயர்த்தி உள்ளனர்.

அன் இன்ஸ்டால்

அன் இன்ஸ்டால்

ஹாட் ஸ்டாரை தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை எல்லாம் வைக்காமல் நேரடியாக நெட்டிசன்கள் #UninstallHotstar ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். இதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் ட்விட்டரில் குவிந்து இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது.

இந்தியாவை சூறையாடியவர்

இந்தியாவை சூறையாடியவர்

இந்தியாவிற்குள் நுழைந்து இந்திய வளங்களை கொள்ளை அடித்து பல ஆயிரம் இந்துக்களை கொன்று நம்மை அடிமைப்படுத்திய பாபரை இப்படியா நல்லவனாக மாற்றி காட்டுவீர்கள் சில பாலிவுட் ஜிகாதிகள் செய்யும் வேலைகள் தான் இதெல்லாம் என நெட்டிசன்கள் கோபத்தின் உச்சிக்கே சென்று கமெண்ட்டுகளில் திட்டி வருகின்றனர்.

இந்தியளவில் முதலிடம்

இந்தியளவில் முதலிடம்

தி எம்பயர் வெப்சீரிஸை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் புரமோட் செய்து டிரெண்ட் செய்து வரும் நிலையில், நெட்டிசன்கள் இந்தியளவில் #UninstallHotstar ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். ஹாட்ஸ்டாரில் இருந்து இந்த வெப்சீரிஸை நீக்கவில்லை என்றால் ஹாட்ஸ்டாரை அன் இன்ஸ்டால் செய்வதை தவிர வேறு வழியில்லை என்று பலரும் அன் இன்ஸ்டால் செய்யும் வீடியோக்களையும், ஸ்க்ரீன் ஷாட்களையும் ஷேர் செய்து வருகின்றனர்.

ரியல் அண்ட் ரீல்

ரியல் அண்ட் ரீல்

முகலாய மன்னர்களை பாலிவுட் எப்படி காட்சிப் படுத்துகின்றது என ரித்திக் ரோஷன் மற்றும் குணால் கபூரின் புகைப்படங்களை பதிவிட்டு, ஆனால், இவர்கள் உண்மையில் எப்படி இருந்தார்கள் என சில புகைப்படங்களையும் ஷேர் செய்து பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

அன் இன்ஸ்டால் பண்ணிட்டேன்

அன் இன்ஸ்டால் பண்ணிட்டேன்

இந்த ஹாஷ்டேக்கில் ஏகப்பட்ட பாலிவுட் நெட்டிசன்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை முழுமையாக அன் இன்ஸ்டால் செய்து விட்டதாக ஸ்க்ரீன் ஷாட்களை பதிவிட்டு வருகின்றனர். இந்தியளவில் இந்த ஹாஷ்டேக் டிரெண்ட் ஆகி வரும் நிலையில், சில ஆயிரம் பேர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இருந்து அதிரடியாக வெளியேறி இருக்கலாம் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X