அட கன்றாவியே.. டாய்லெட் பேப்பரில் உருவான டிரெஸ்.. கூச்சமே இல்லாமல் போட்டுக் கொண்டு திரியும் நடிகை!

மும்பை: பிக் பாஸ் ஓடிடி மற்றும் சன்னி லியோனின் ஸ்ப்லிட்ஸ் வில்லா உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பிரபலமான இந்தி டிவி சீரியல் நடிகையின் ஆள் மனதில் யாரோ நீங்க தான் ஃபேஷன் குயின் என பதிய வைத்து விட்டார்களோ என்னவோ தெரியவில்லை.

நம்ம ஊரு மீரா மிதுனை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு தினமும் பல சர்ச்சைகளை கிளப்பி வருகிறார்.

சமீபத்தில் வெறும் கிவி பழத்தை மட்டுமே வைத்து தனது மார்பகங்களை மறைத்த உர்ஃபி ஜாவேத் தற்போது டாய்லெட் பேப்பரில் டிரெஸ்ஸை உருவாக்கி அணிந்துள்ளார்.

மீரா மிதுனை மிஞ்சிட்டாங்க

மீரா மிதுனை மிஞ்சிட்டாங்க

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சோஷியல் மீடியாவில் நடிகை மீரா மிதுன் இதுபோலத்தான் தினசரி கவர்ச்சி போட்டோக்களாக பதிவிட்டு இணைய வாசிகளிடம் ஏகப்பட்ட ட்ரோல்களை பெற்றுக் கொண்டு ஒரு கட்டத்துக்கு மேல், இப்போ ஆள் எங்கே இருக்காருன்னு கண்டே பிடிக்க முடியாத அளவுக்கு தலை மறைவாக உள்ளார். அதே போலத்தான் தற்போது பிக் பாஸ் ஓடிடி மூலம் பிரபலமான உர்ஃபி ஜாவேத் எல்லை மீறிய ஆபாசத்தை சமூக வலைதளங்களில் கொட்டி ஏகப்பட்ட புகார்களுக்கு ஆளாகி வருகிறார்.

டிரெஸ் எனும் பெயரில்

டிரெஸ் எனும் பெயரில்

இதெல்லாம் ஒரு டிரெஸ்ஸா என பாலிவுட் ரசிகர்கள் காரி துப்பும் அளவுக்கு படு மோசமான உடைகளை உடுத்திக் கொண்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்து வருகிறார். ஏகப்பட்ட நெகட்டிவிட்டிகள் மற்றும் ட்ரோல்களை எல்லாம் தாண்டி தினமும் உர்ஃபி ஜாவேத் மீது ஏகப்பட்ட புகார்களும் காவல் நிலையங்களில் குவிந்து வரும் அளவுக்கு சர்ச்சை குயினாக மாறி வருகிறார்.

ஒரு பக்கத்தை மறைத்து

ஒரு பக்கத்தை மறைத்து

அந்த இடத்தை காட்டினால் மட்டும் தான் தன்னை அரெஸ்ட் பண்ண முடியும் என திமிராக பேசி வரும் உர்ஃபி ஜாவேத் ஒரு பக்கத்தின் ஆடையையே கழட்டி அந்த இடத்தை காட்டினால் சிக்கிக் கொள்வோம் என்பதற்காக ஹார்ட்டின் எமோஜியை எடிட் செய்து போட்டு இணையத்தை தீப்பிடிக்க வைத்து வருகிறார்.

டாய்லெட் பேப்பரில் டிரெஸ்

சமீபத்தில் கார் சீட்டை டிரெஸ்ஸாக மாற்றிய உர்ஃபி ஜாவேத்திடம் அடுத்ததாக டாய்லெட் சீட்டை ஆடையாக போட்டுக்கோங்க ரொம்ப நல்லா இருக்கும் என சில நெட்டிசன்கள் கடுப்பில் திட்டிய நிலையில், அந்த ஐடியாவையே அமல்படுத்தும் விதமாக தற்போது டாய்லெட் பேப்பரில் படு மோசமான உடையை உடுத்திக் கொண்டு சோஷியல் மீடியாவை கலங்கடித்து வருகிறார்.

என்ன கருமம் டா இது

என்ன கருமம் டா இது

டாய்லெட் பேப்பர் காணோமே என இளம் பெண் ஒருவர் அர்ஜென்டாக பாத்ரூமில் இருந்து வெளியே வந்து அலற அதையே ஆடையாக மாற்றிக் கொண்டு அழகான பூ டிசைன் எல்லாம் வைத்துக் கொண்டு உர்ஃபி ஜாவேத் அணிந்திருக்கும் டாய்லெட் பேப்பர் டிரெஸ் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் என்ன கருமம் டா இது என கலாய்த்து வருகின்றனர்.

வாந்தி வருது

வாந்தி வருது

அடச்சீ.. மோஷன் போற இடத்துல என்ன ஃபேஷன் வேண்டி கிடக்கு வீடியோவை பார்த்த உடனே எனக்கு வாந்தி தான் வருது என உர்ஃபி ஜாவேத்தின் வீடியோ போஸ்ட்டுக்கு கீழ் பங்கமாக பலரும் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர். உர்ஃபி ஜாவேத்தின் ரசிகர்கள் இந்த க்ரியேட்டிவ் ஐடியாவும் சூப்பர் என வழக்கம் போல ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X