ஜூன் மாதம் ஒடிடியில் வெளியாக உள்ள படங்கள்…அட லிஸ்ட்டில் அந்த படமும் இருக்கே !

சென்னை : திரையரங்குகளில் ஒவ்வொரு வாரமும் மூன்று அல்லது நான்கு தமிழ் படங்கள் ரிலீசாகி வரும் நிலையில் அதே அளவிற்கு ஓடிடியிலும் புதிய படங்களும் ஏற்கனவே திரையரங்கில் ரிலீஸ் ஆன படங்களும் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் ஜூன் மாதம் டான், ஜன கண மன உள்ளிட்ட திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகும் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஓடிடியில் எந்தெந்த படங்கள், வெப் தொடர்கள் வெளியாக உள்ளன என்பதை பார்க்கலாமா?

டான்

டான்

சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'டான்'. ஜூன் 10-ஆம் தேதி நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 'லைகா ப்ரொடக்ஷன்ஸ்' தயாரித்துள்ள இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ஜன கண மன

ஜன கண மன

மலையாளத்தில் பிருத்விராஜ் மற்றும் சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ள ஜன கண மன திரைப்படம் நெட்ஃபிக்ஸ் தளத்தில் ஜூன் 2 வெளியாக உள்ளது. குயின்ஸ் இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கிய இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் மம்தா மோகன்தாஸ், ஸ்ரீ திவ்யா துருவன், ஷாரி, ஷம்மி திலகன், ராஜா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

போர்கன் சீசன் 4

ஜூன் 2 ஆம் தேதி Netflix இல் நான்காவது சீசன் வெளியாக உள்ளதால், போர்கனின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முந்தைய சீசன்கள் அனைத்தும் டென்மார்க்கின் முதல் பெண் பிரதமராக Birgitte Nyborg ஆனதைக் காட்டியது. அவரை, பதவியில் இருந்து வீழ்த்த புதிய ஜனநாயகக் கட்சி எடுத்துவரும் தந்திரம் குறித்து இந்த சீசனில் விரிவாக காட்டப்பட்டுள்ளது.

Hustle

Hustle

ஜெரிமியா ஜாகர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'Hustle' நெட்ஃபிளிக்ஸ் ஜூன் 8ந் தேதி வெளியாக உள்ளது. கூடைப்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த திரைப்படத்தில் ஆடம் சாண்ட்லர், குயின் லதிஃபா, பென் ஃபோஸ்டர், ராபர்ட் டுவால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Peaky Blinders Season 6

அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பீக்கி பிளைண்டர்ஸ் சீசன் 6 ஜூன் 10ந் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாக உள்ளது. இந்தத் தொடரில் சிலியன் மர்பி, ஹெலன் மெக்ரோரி, பால் ஆண்டர்சன், சோஃபி ரண்டில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த வெப்தொடரை ஸ்டீவ் நைட் உருவாக்கியுள்ளார்.

மைதான் (இந்தி)

மைதான் (இந்தி)

'பதாய் ஹோ' திரைப்படத்திற்கு பிறகு, இயக்குநர் அமித் ரவீந்தர்நாத் சர்மா இயக்கிய திரைப்படம் மைதான். கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும் இப்படத்தில், அஜய் தேவ்கன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். போனி கபூர், ஆகாஷ் சாவ்லா மற்றும் அருணவா ஜாய் சென்குப்தா ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படம் ஜூன் 3ந் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X