OTT Release: இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள்.. லால் சலாம் முதல் ஹனுமான் வரை!
சென்னை: ஒவ்வொரு வாரமும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமைகளில் திரையரங்குகளில் புது படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், ஓடிடியில் ஏராளமான படங்கள் மற்றும் வெப் தொடர்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. ஓடிடியில் வெளியாகும் பிரபல நடிகர்களின் படங்கள் முதல் இளம் நடிகர்களின் படங்கள் வரை அனைத்து மொழி திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அந்த வகையில், இந்த வாரம் ஆஹா, நெட்பிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார், ஜியோ சினிமா போன்ற ஓடிடி தளங்களில் ரிலீசாகும் படங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
லால் சலாம்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் நடிப்பில் லால் சலாம் படம் வெளியாகி இருந்தது. இதில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் ரஜினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. தியேட்டரிலேயே இந்த படம் பெரிய அளவில் ஓடாத காரணத்தினால் ஓடிடி நிறுவனங்கள் இப்படத்தை வாங்க தயக்கம் காட்டி வந்தனர். இப்போது ரஜினியால் லால் சலாம் படம் விற்று உள்ளது.அதோடு சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஏப்ரல் பதினைந்தாம் தேதி லால் சலாம் வெளியாகிறது.

சைரன்: ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, அழகம்பெருமாள், யோகி பாபு, அனுபமா பரமேஷ்வர் உள்ளிட்டவர்கள் நடித்த திரைப்படம் சைரன்.ஆண்டனி பாக்கியராஜ் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக இப்படம் பிப்ரவரி 16 ஆம் தேதிக்கு தியேட்டரில் வெளியானது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற இத்திரைப்படம் ஏப்ரல் 11ந் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது.

பிரேமலு: ஓடிடி தளங்கள் வழியாக தமிழ், தெலுங்கு, கன்னட மற்றும் இந்தி பார்வையாளர்களைச் சென்றடைந்த மலையாள படங்கள் இப்போது, திரையரங்குகளிலும் சக்கைப்போடு போட்டு வருகின்றன. இந்த வகையில் பிப்ரவரி 9 ம் தேதி வெளியான பிரேமலு திரைப்படத்தை,ரிஷ் ஏடி இயக்கி இருந்தார். இதில், நஸ்லன் கே. கஃபூர், மமிதா பைஜு நடித்திருந்தனர். 3 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், உலகம் முழுவதும் 130 கோடிகளைக் கடந்தது. பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த இப்படம், ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ஹனுமான்: இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் அதிரடி பிளாக்பஸ்டர் திரைப்படமான ஹனுமான் படத்தின் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள பதிப்புகளை ஏப்ரல் 5 முதல் ஸ்ட்ரீமாக உள்ளது. தேஜா சஜ்ஜா மற்றும் அமிர்தா ஐயர் முதன்மைப்பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், வரலக்ஷ்மி சரத்குமார், சமுத்திரக்கனி, வினய் ராய் மற்றும் வெண்ணிலா கிஷோர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.



Click it and Unblock the Notifications











