OTT Release: கொலை முதல் மாஸ்க் கேர்ள் வரை.. இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் புதிய வெப் தொடர்கள்!
சென்னை: திரையரங்குக்கு இணையாக வெள்ளிக்கிழமை வந்தால்,ஓடிடி தளங்களும் வார வாரம் புது புது படங்களை வெளியிட்டு வருகிறது.
இணையத்தில் வெளியாகும் படங்களுக்கு இணையாக ஓடிடித்தளத்தில் வெப் தொடர்களின் வரத்தும் அதிகரித்துள்ளது.
சுழல்,அயலி, ஸ்வீட் காரம் காபி போன்ற வெப் தொடர்களுக்கு வரவேற்பு அதிகம் இருந்தால், இந்த வாரம் படங்களைவிட, அதிக இணையத் தொடர்கள் வெளியாக உள்ளது.

Taali: சுஷ்மிதா சென் நடித்த தாலி (Taali) என்ற வெப் தொடர் ஆகஸ்ட் 15ந் தேதி ஜியோ சினிமாவில் வெளியானது. இந்தத் தொடரில் சுஷ்மிதா சென் திருநங்கையாக நடித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் ஸ்ரீகவுரி சாவந்த் என்ற திருநங்கையின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்த தொடர் எடுக்கப்பட்டு உள்ளது

கொலை: இன்பினிட்டி பிலிம் வெஞ்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் கொலை திரைப்படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில், ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா சங்கர், கிஷோர் குமார், ஜான் விஜய் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சிவக்குமார் விஜயன் இசையமைத்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 20ந் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

மத்தகம்: இயக்குநர் பிரசாத் முருகேசன் எழுதி இயக்கியுள்ள மத்தகம் வெப் சீரிஸ் ஆகஸ்ட் 18 முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. நடிகர் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் மற்றும் டிடி ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் மணிகண்டன் முதல் முறையாக வில்லனாக நடிக்கும் இந்த சீரிஸில் அதர்வா நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

MASK GIRL: மாஸ்க் கேர்ள் என்கிற ஆங்கில வெப்தொடர் நாளை நெட்பிலிக்ஸில் வெளியாக உள்ளது. ஏழு எபிசோடுகள் கொண்ட இந்த தொடரில் Mask Girl starring Go Hyun Jung, Nana, Ahn Jae Hong மற்றும் பலர் நடித்துள்ளனர்.
10 Days of a Bad Man:10 டேஸ் ஆஃப் எ பேட் மேன் வெப் சீரிஸை உலுஸ் பைரக்டார் இயக்கியுள்ளார். ஒரு தனியார் புலனாய்வாளர் ஒருவர் ஒரு மாளிகையில் நடக்கும் கொலையின் பின்னணியை அலசி ஆராய்ந்து உண்மையை வெளியில் கொண்டு வருகிறார். 10 Days of a Bad Man என்ற இந்த ஆங்கில வெப் தொடரை ஆகஸ்ட் 18ந் தேதி நெட்பிளிக்ஸில் பார்க்கலாம்.

Guns & Gulaabs: ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டிகே அவர்களில் இயக்கத்தில் உருவாகி உள்ள வெப் தொடர்தான் கன்ஸ் & குலாப்ஸ். இந்தத் தொடரில் ராஜ்குமார் ராவ் , துல்கர் சல்மான் , ஆதர்ஷ் கவுரவ் , கௌதம் ஷர்மா, கௌரவ் சர்மா மற்றும் குல்ஷன் தேவையா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த வெப் தொடர் நெட்பிலிக்ஸில் வரும் 18ந் தேதி வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











