OTT Release: இந்த வாரம் ஓடிடியில் எத்தனை படங்கள் ரிலீஸ் தெரியுமா?

சென்னை: வாரா வாரம் ஓடிடியில் ஆரவாரமாக திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. கடந்த வாரம் அதிக வெப் தொடர்கள் வெளியானதால், இந்த வாரம் பலத் திரைப்படங்கள் வெளியாக உள்ளது.

வழக்கமாக வெள்ளிக்கிழமைக்கு படங்கள் வெளியான நிலையில் ஓடிடி தளங்கள் போட்டி போட்டுக்கு கொண்டு வியாழக்கிழமையே பல படங்களை வெளியிட்டு வருகின்றன. இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

Upcoming OTT Release Movies This Week in Tamil August 21 to 27,2023

பீட்சா 3 தி மம்மி: விஜய் சேதுபதி மற்றும் ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியான பீட்சா திரைப்படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் பீட்சா 3 தி மம்மி. இதில் அஸ்வின் உடன் இணைந்து காளி வெங்கட், கௌரவ் நாராயணன், குரேஷி, பவித்ரா, அனுபமா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திருக்குமரன் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரித்துள்ள இப்படம் ஜூலை 28ஆம் தேதி வெளியான நிலையில், சிம்ப்ளி சௌத் ஓடிடி தளத்தில் இன்று இப்படத்தை பார்க்கலாம்.

Upcoming OTT Release Movies This Week in Tamil August 21 to 27,2023

பிளாக் & வொயிட்: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமான கார்த்ர்த்திக் ராஜ் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் தான் பிளாக் & வொயிட். இந்த படத்தில் கார்த்திக் ராஜுக்கு ஜோடியாக தீபா நடித்துள்ளார். இப்படத்தை வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி ஜீ5 OTT தளத்தில் வெளியாக உள்ளது.

இன்பினிட்டி: இயக்குனர் சாய் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் தான் இன்பினிட்டி.கொலை, விசாரணை, குற்றவாளிகள் என்று திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் நடராஜ், வித்யா பிரதீப்,முனிஸ்காந்த் உட்பட பல நடித்துள்ளனர். கடந்த மாதம் தியேட்டரில் வெளியான இப்படம் , சிம்ப்ளி சௌத் ஓடிடியில் வெளியாக உள்ளது

Upcoming OTT Release Movies This Week in Tamil August 21 to 27,2023

ப்ரோ (தெலுங்கு) : கடந்த 2021ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் படம் வினோதய சித்தம். இத்திரைப்படத்தை சமுத்திரக்கனி இயக்கி இருந்தார். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் தம்பிராமையா நடித்திருந்தார். தமிழில் வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு ப்ரோ என்ற பெயரில் வெளியானது. இதில், தமிழில் சமுத்திரக்கனி நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாண், தம்பி ராமையா கதாபாத்திரத்தில் சாய் தேஜ் நடித்துள்ளனர். இப்படம் வரும் 25-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது.

ஸ்லம் டாக் ஹஸ்பண்ட் (தெலுங்கு) : ஸ்லம் டாக் ஹஸ்பண்ட் திரைப்படம் கடந்த மாதம் 21ந் தேதி வெளியானது. இதில், சஞ்சய் ராவ், பிரணவி மனுகொண்டா, பிரம்மாஜி மற்றும் சப்தகிரி ஆகியோர் நடித்துள்ளனர். தெலுங்கு நகைச்சுவை திரைப்படமான இப்படத்தை டாக்டர் ஏ.ஆர். ஸ்ரீதர் இயக்கி உள்ளார். இப்படத்தை அமோசான் பிரைம் வீடியோவில் இன்றிலிருந்து பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X