OTT Release this week: அனிமல் முதல் ஃபைட் கிளப் வரை.. இந்த வாரம் அதிரவிடும் ஓடிடி ரிலீஸ்!

சென்னை: கடந்த வாரம் தியேட்டரில் ஒரு படம் கூட வெளியாகாத நிலையில் இந்த வாரம் தியேட்டரில் ஆர் ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன், அசோக் செல்வன், சாந்தனு நடித்த ப்ளூ ஸ்டார், யோகி பாபு நடித்த தூக்குத்துரை உள்ளிட்ட பல படங்கள் வெளியாகின்றன. இந்நிலையில், தியேட்டரில் வெளியாகும் படங்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக ஓடிடியிலும் இந்த வாரம் பல பெரிய படங்கள் வெளியாகின்றன.

கடந்த வாரம் சலார் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த வாரம் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு கொண்டிருந்த அனிமல் திரைப்படம் மற்றும் தமிழில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் வெளியான ஃபைட் கிளப் உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன.

 Upcoming OTT Release Movies This Week in Tamil: Jan 22 – Jan 28, 2024

அக்வாமேன் 2: ஹாலிவுட் படமாக வெளியான அக்வாமேன் படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. ஜேசன் மோமோ, ஆம்பர் ஹெர்ட் நடிப்பில் வெளியான டிசி காமிக்ஸ் தயாரித்த அக்வாமேன் 2 திரைப்படம் வரும் ஜனவரி 23-ஆம் தேதி புக் மை ஷோ ஸ்ட்ரீமிங்கில் வெளியாகிறது. அதன் பின்னர் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 Upcoming OTT Release Movies This Week in Tamil: Jan 22 – Jan 28, 2024

மோகன்லாலின் நேரு: ஜித்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான நேரு திரைப்படம் மலையாளத்தில் 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய நிலையில், வரும் ஜனவரி 23-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ஜித்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த திருஷ்யம் 1 மற்றும் 2 படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் வழக்கறிஞராக மோகன்லால் நடித்த இந்தப் படமும் தியேட்டரில் பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

 Upcoming OTT Release Movies This Week in Tamil: Jan 22 – Jan 28, 2024

அனிமல்: சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல், திரிப்தி திம்ரி பப்லு பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்த அனிமல் திரைப்படம் வரும் ஜனவரி 26-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 900 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய இந்த திரைப்படம் 3 மணி நேரம் 25 நிமிடங்கள் கொண்ட பெரிய படமாகவும் ஏ சான்றிதழ் பெற்ற படமாகவும் உருவாகி இருந்தது. பல சினிமா பிரபலங்கள் வெளிபப்டையாக இந்த படம் பிடிக்கவில்லை என்றும் இதுபோன்ற படங்கள் வெற்றிப் பெறுவது சரி அல்ல என்றும் கூறியிருந்தனர். சிங்கப்பூர் சலூன் படத்தின் ஹீரோ ஆர்ஜே பாலாஜியும் அனிமல் படத்தை பார்க்கவே இல்லை என்றும் கூறியிருந்தார்.

 Upcoming OTT Release Movies This Week in Tamil: Jan 22 – Jan 28, 2024

ஏஜென்ட்: நாக சைதன்யாவின் தம்பி அகில் அக்கினேனி மற்றும் மம்மூட்டி நடிப்பில் கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஏஜென்ட் திரைப்படம் குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 26 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

 Upcoming OTT Release Movies This Week in Tamil: Jan 22 – Jan 28, 2024

ஃபைட் கிளப்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் புதிதாக தொடங்கிய தயாரிப்பு நிறுவனமான ஜி ஸ்குவாட் மூலமாக முதலில் ரிலீஸ் செய்த ஃபைட் கிளப் திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. உறியடி விஜயகுமார் நடிப்பில் வெளியான இந்த படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. ஆனால், இந்த படத்தை ஓடிடியில் காண ரசிகர்கள் வெயிட் செய்து வரும் நிலையில், இந்த வாரம் சனிக்கிழமை ஜனவரி 27ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X