OTT Release: வீக் எண்ட் மோட் ஆன்.. இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ள படங்களின் லிஸ்ட்
சென்னை: ஒவ்வொரு வாரமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக, வித்தியாசமான கதைக்களத்தில் பல்வேறு படங்கள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில், இந்த வாரம் ஓடிடி தளத்தில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தியேட்டரில் நீங்கள் பார்க்க தவறிய திரைப்படத்தை சௌரியமாக வீட்டில் அமர்ந்து கொண்டுப் பார்க்கலாம்.
![Upcoming OTT Release Movies This Week in Tamil: [September 11 to septemer 17, 2023] Upcoming OTT Release Movies This Week in Tamil: [September 11 to septemer 17, 2023]](https://images.filmibeat.com/ta/img/2023/09/aneethi-article-3-down-1694590279.jpeg)
அநீதி: இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அநீதி திரைப்படம், இதுவரை திரையுலகில் பேசப்படாத புதுகதையை பேசி உள்ளது. இந்த படத்தில், அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்க, துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் ஆஹா ஒடிடி தளத்தில் செப்டம்பர் 15ந் தேதி ஒளிபரப்பாக உள்ளது.
![Upcoming OTT Release Movies This Week in Tamil: [September 11 to septemer 17, 2023] Upcoming OTT Release Movies This Week in Tamil: [September 11 to septemer 17, 2023]](https://images.filmibeat.com/ta/img/2023/09/screenshot83837-1694590310.jpg)
போலா சங்கர்(தெலுங்கு): மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான போலாசங்கர் திரைப்படம் செப்டம்பர் 15 முதல் நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. கடந்த மாதம் ஆகஸ்ட் 11ந் தேதி தியேட்டரில் வெளியான இப்படத்தில், தமன்னா கதாநாயகியாகவும், கீர்த்தி சுரேஷ் சிரஞ்சீவியின் தங்கையாகவும் நடித்துள்ளனர். இப்படம் அஜித் நடித்த வேதாளம் திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.
கோபிசந்த் ராமபாணம்(தெலுங்கு): இயக்குனர் ஸ்ரீவாஸ் ராமபாணம் இயக்கத்தில், கோபிசந்த் ராமபாணம் திரைப்படம் உருவாக உள்ளது. இத்திரைப்படத்தில், ஜெகபதி பாபு மற்றும் குஷ்பு முக்கிய வேடங்களில் நடித்த இந்தப் படத்தில் டிம்பிள் ஹயாதி ஹீரோயினாக நடித்துள்ளார். . ஃபேமிலி ஆக்ஷன் என்டர்டெய்னராக இப்படத்தை செப்டம்பர் 14;ந் தேதி முதல் Netflix தளத்தில் பார்க்கலாம்.
7:11 p.m (தெலுங்கு): 7:11 PM, டைம் டிராவல் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட தெலுங்கு திரைப்படம், Amazon Prime இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. சாஹஸ் பகடலா மற்றும் தீபிகா ரெட்டி முக்கிய வேடங்களில் சைது மதலா இயக்கியுள்ளார்.
![Upcoming OTT Release Movies This Week in Tamil: [September 11 to septemer 17, 2023] Upcoming OTT Release Movies This Week in Tamil: [September 11 to septemer 17, 2023]](https://images.filmibeat.com/ta/img/2023/09/screenshot83836-1694590300.jpg)
காலா(இந்தி): பிஜாய் நம்பியார் இயக்கத்தில் க்ரைம் த்ரில்லராக உருவாகி உள்ள வெப் தொடர் காலா. இதில் அவினாஷ் திவாரி, ரோஹன் வினோத் மெஹ்ரா, நிவேதா பெத்துராஜ், தாஹேர் ஷபீர் மற்றும் ஹிட்டன் தேஜ்வானி ஆகியோர் நடித்துள்ளனர். இத்தொடரை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 15ந் தேதியில் இருந்து பார்க்கலாம்.
![Upcoming OTT Release Movies This Week in Tamil: [September 11 to septemer 17, 2023] Upcoming OTT Release Movies This Week in Tamil: [September 11 to septemer 17, 2023]](https://images.filmibeat.com/ta/img/2023/09/18-1694590269.jpg)
18Plus( மலையாளம்) : மலையாள காதல் நகைச்சுவை திரைப்படமான ஜர்னி ஆஃப் லவ் 18+ ஜூலை 7, 2023 அன்று திரையரங்கில் வெளியானது. நஸ்லென் கே. கஃபூர் ஹீரோவாக அறிமுகமாகி உள்ள இப்படத்தை அருண் டி. ஜோஸ் இயக்கி உள்ளார். இப்படம் செப்டம்பர் 15ந் தேதி சோனி லிவ் மூலம் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications











