Ott This week: தியேட்டரில் வசூலை அள்ளிய படங்கள்.. இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் பட்டியல்!

சென்னை: ஒடிடி தளங்களின் வளர்ச்சியால் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் பொதுமக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

எவ்வளவு பெரிய நடிகரின் படமாக இருந்தாலும், தியேட்டரில் வெளியான 4 வாரங்களில் அந்த படம் ஒடிடி தளத்தில் வெளியாகிவிடும் என்பதால், பலர் வீட்டில் இருந்தபடியே படத்தை பார்த்துவிடுகின்றனர்.

அப்படி ஓடிடியில் படம் பார்ப்பவர்களை தக்கவைத்துக்கொள்ள ஓடிடி தளங்கள் போட்டி போட்டுக்கொண்டு வாரா வாரம் படத்தை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் என்னென்ன படம் என்று பார்க்கலாம்.

Upcoming OTT Release Movies This Week: leo,chithha and apurva and more movies to be released on ott

லியோ: நடிகர் விஜய் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற லியோ திரைப்படத்தில், பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக சென்றாலும், இரண்டாம் பாதி மற்றும் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளது. படம் வெளியாகி ஒரு மாதமாக உள்ள நிலையில் இத்திரைப்படம் நவம்பர் 16ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை தயாரிப்பு நிறுவனம் இதுவரை அறிவிக்கவில்லை.

சித்தா: நடிகர் சித்தார்த் நடிப்பில் திரையரங்கில் வெளியாகி வரவேற்பை பெற்ற சித்தா வரும் நவம்பர் 17ந் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. நடிகர் சித்தார்த் தனது இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்த இப்படத்தை அருண்குமார் இயக்கியுள்ளார். இதில் நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அபூர்வா: ஒரு துப்பறிவாளனைச் சுற்றி நடக்கும் வஞ்சகம் மற்றும் ரகசியத்தை கொண்டு இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், அபிஷேக் பானர்ஜி, ராஜ்பால் யாதவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் நவம்பர் 15ந் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது.

Upcoming OTT Release Movies This Week: leo,chithha and apurva and more movies to be released on ott

கண்ணூர் ஸ்குவாட்: கண்ணூர் ஸ்குவாட்' படத்தில் மம்முட்டி, விஜயராகவன், கிஷோர், ரோனி டேவிட், ஷபரீஷ் வர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர். செப்டம்பர் மாதம் 28ந் தேதி வெளியான இத்திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றதை அடுத்து, கணிசமான வசூலை அள்ளியது. டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் நவம்பர் 17ந் தேதி முதல் இப்படத்தை பார்க்கலாம்.

Upcoming OTT Release Movies This Week: leo,chithha and apurva and more movies to be released on ott

Congrats My Ex: ப்ரூக்ஸா அமருஜி இயக்கத்தில், பெனடோன் பிலிம்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் Congrats My Ex. இப்படத்தில் பெல்லா ரானி கேம்பென், பிரைட் வச்சிரவிட் சிவாரீ, மஹிர் பாண்டி மற்றும் அனாஹிதா பூஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நகைச்சுவை காதல் திரைப்படமான இப்படத்தை நவம்பர் 16ந் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம்.

Upcoming OTT Release Movies This Week: leo,chithha and apurva and more movies to be released on ott

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X