OTT Release: இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட்!
சென்னை: கொரோனா காலத்திற்கு பின் ஓடிடித் தளங்களின் வளர்ச்சி அசுர வளர்ச்சி அடைந்தது என்று தான் சொல்ல வேண்டும். இது சினிமா பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. இந்த ஓடிடி தளங்கள், வாரா வாரம் புது புது படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த வார ஓடிடியில் என்னென்ன படங்கள் வெளியாக உள்ளன என்பதை பார்க்கலாம்.
ரோமியோ: நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் ரோமியோ. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்தில், மிருணாளினி, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற இத்திரைப்படம் வரும் மே 10ந் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

ஆவேஷம்: இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கிய ஆவேஷம் படத்தில், ஃபஹத் ஃபாசில், மன்சூர் அலிகான், ஆஷிஷ் வித்யாத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 11ந் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.150 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த இப்படம் வரும் மே 9-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
தி பாய்ஸ்: டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் நோவா பிலிம் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தி பாய்ஸ். இப்படத்தில் ஷா ரா, கலக்கப் போவது யாரு வினோத், அர்ஷத், யுவராஜ், ஆர்யா, கிருஷ்ணா, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, ரோபோ சங்கர் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றநிலையில், இப்படத்தை ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இன்று முதல் பார்க்கலாம்.
கள்வன்: அறிமுக இயக்குனர் பிவி ஷங்கர் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் கள்வன். இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து நடிகை இவானா, பாரதிராஜா, விஜய் டிவி தீனா என பலர் நடித்துள்ளனர். சிறு திருட்டு வேலைகள் செய்யும் ஒரு இளைஞரின் வாழ்க்கையில் காதலும் அரவணைப்பும் கிடைத்தால் அவன் எப்படி பட்டவனாக மாறுவான் என்பது தான் கள்வன் திரைப்படத்தின் கதை. இப்படம் கடந்த மாதம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இத்திரைப்படம் வரும் 10ந் தேதி Hotstar , Tentkotta போன்ற ஓடிடித் தளத்தில் பார்க்கலாம்.
சித்திரம் சுதாரா: ஆர்.என்.ஹர்ஷ்வர்தன் இயக்கத்தில் சஸ்பென்ஸ் திரில்லர் படம் சித்திரம் சுதாரா. இப்படத்தில், வருண் சந்தேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டிஜி விஸ்வ பிரசாத் தயாரிப்பில், ஷீத்தல் பட் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் மற்றும் இசையமைப்பிற்கு ராதன் மற்றும் ஒளிப்பதிவிற்கு ஜவஹர் ரெட்டி உட்பட திறமையான தொழில்நுட்பக் குழு உள்ளது. இதில் அலரி ரவி பாபு, தனிக்கெள பரணி, அதிதி கவுதம் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இப்படம் மே 9ந் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications











