OTT release this week: இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகும் படங்கள்.. உங்கள் பேவரைட் மூவி இருக்கா?

சென்னை: கடந்த வாரம் ஓடிடியில் ஜவான், இறுகப்பற்று, ரத்தம் போன்ற திரைப்படங்கள் வெளியான நிலையில், இந்த வாரம் ஓடிடியில் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் வெளியாக உள்ளன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

கொரோனாவிற்கு பிறகு ஓடிடி தளங்களில் படம் வெளியாவது அதிகரித்து வருவதால், நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார் போன்ற தளங்கள் வாரா வாரம் புது புது படங்களை ஓடிடியில் வெளியிட்டு வருகின்றன.

Upcoming OTT Release Movies This Week: November 5 to November 12, 2023

தி ரோட்: த்ரிஷா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான தி ரோட் படம் வரும் வெள்ளிக்கிழமை ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2000ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டது. இப்படத்தை அருண் வசீகரன் எழுதி இயக்கியுள்ளார்.

Upcoming OTT Release Movies This Week: November 5 to November 12, 2023

லேபிள்: கனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள வெப் தொடர் லேபிள். இந்தத் தொடரில் ஜெய், தன்யா ஹோப், மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இத்தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நவம்பர் 10ந் தேதி வெளியாக உள்ளது.

Upcoming OTT Release Movies This Week: November 5 to November 12, 2023

பிப்பா: இஷான் கட்டர் நடிப்பில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் பிப்பா.. 1971-ம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போரில் இந்தியாவின் கிழக்குப் போர்முனையில் போரிட்ட 45வது குதிரைப்படை டேங்க் ஸ்குவாட்ரனின் மிகவும் ஆற்றல் வாய்ந்த மற்றும் துணிச்சலான கேப்டன் மேத்தா ஆவார். இந்த கேரக்டரில் இஷான் நடித்துள்ளார். இப்படம் 10ந் தேதி Amazon Prime வீடியோவில் ஸ்ட்ரீமிங்காக உள்ளது.

ரெயின்போ ரிஷ்டா: இயக்குநர் ஜெயதீப் சர்க்கார் இயக்கத்தில், திரிநேத்ரா ஹல்தார் கும்மாராஜு, அனீஸ் சைகியா மற்றும் சனம் சவுத்ரி, சோஹம் சென்குப்தா, சுரேஷ் ராம்தாஸ் ஆகியோர் நடிப்பில் ரெயின்போ ரிஷ்டா என்ற வெப் தொடர் உருவாகி உள்ளது. இந்த தொடரை அமேசான் பிரைமில் இன்று முதல் காணலாம்.

Upcoming OTT Release Movies This Week: November 5 to November 12, 2023

Ghoomer: ஆர் பால்கி இயக்கத்தில் அபிஷேக் பச்சன் மற்றும் சயாமி கெர் நடித்துள்ள திரைப்படம் கூமர். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் ஷபானா ஆஸ்மி மற்றும் அங்கத் பேடி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை, ZEE5 OTT தளத்தில் நவம்பர் 10ந் தேதியிலிருந்து பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X