OTT Release: ரிப்பீட் மோடில் படங்களை பார்க்க ரெடியா.. இந்த வார ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன!
சென்னை: வாராவாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களில் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
சில படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் பார்த்ததை விட ஓடிடியில் தான் அதிகம் பார்க்கப்படுகின்றன. அதுவும் காமெடி எமோஷன் கலந்த மாதிரியான படங்களுக்கு ஓடிடி தளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

அந்த வகையில் ஓடிடியில் இந்த வாரம் வெளியாக உள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
மார்க் ஆண்டனி: விஷால் மற்றும் எஸ். ஜே. சூர்யா நடிப்பில் வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் விஷாலுக்கு 100 கோடி ரூபாயை வசூல் செய்து தந்த முதல் படமாக கருதப்படுகிறது. இத்திரைப்படம் அமேசான் பிரைமில் 13ந் தேதி ஒளிபரப்பாக உள்ளது.
மத்தகம் பாகம் 2: இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் நடிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் மத்தகம். இந்த வெப் தொடரின் முதல் பாகம் ஆகஸ்ட் மாதம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெளியாகி விமர்சனத்தை பெற்றது. இந்த இரண்டாவது சீசன் வரும் 12-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுல்தான் ஆஃப் டெல்லி: டெல்லியின் மிகப்பெரிய நிறுவனத்துடன் பணிபுரியும் அர்ஜுன் பாட்டியாவை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் தான் 'சுல்தான் ஆஃப் டெல்லி: அசென்ஷன்' புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்தொடரில், தாஹிர் ராஜ் பாசின் நடிக்கிறார். அஞ்சும் ஷர்மா, வினய் பதக் மற்றும் நிஷாந்த் தஹியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்தொடர் அக்டோபர் 13ந் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது.
காசர்கோல்டு: ஆசிப் அலி, சன்னி வெய்ன், விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் காசர்கோல்டு. தங்க சுரங்கத்தில் தங்கம் திருடுவதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் அண்மையில் திரையரங்கில் வெளியாகி சக்கைப்போடு போட்டது. இத்திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 13ந் தேதி வெளியாக உள்ளது.
mission impossible: உலகம் முழுவதும் பெரும் ரசிகர் கூட்டத்தை ஈர்த்த 'மிஷன் இம்பாசிபிள்' பட வரிசையின் ஏழாவது பாகமான Mission Impossible Dead Reckoning Part One திரைப்படம் ஜூலை மாதம் தியேட்டரில் வெளியானது. இப்படத்தை அமேசான் பிரைமில் அக்டோபர் 13ந் தேதியில் இருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











