OTT Release: மிஷன் சாப்டர்1 முதல் கேரளா ஸ்டோரி வரை.. இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் தரமான படங்கள்!

சென்னை: வேகமாக மாறிவரும் இந்த டிஜிட்டல் உலகத்திற்கு பல ஆன்லைன் தளங்கள் மக்களின் வாழ்க்கையை சுலபமாக்கியுள்ளன. குறிப்பாக, ஓடிடிதளங்கள் கடந்த சில ஆண்டுகளாக புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன கொரோனா காலகட்டத்திற்கு பின்னர், ஓடிடி தளத்தின் வளர்ச்சி அபரிமிதமானதாக உள்ளது.

தியேட்டருக்குச் சென்று 200 ரூபாய் செலவு செய்து ஒரு படம் பார்ப்பதை விட வருடம் 1,500 ரூபாய் மட்டுமே செலுத்தி ஆயிரக்கணக்கான திரைப்படங்களை ஓடிடி தளத்தில் வீட்டில் இருந்தபடியாக பார்த்து மகிழலாம். லாக் டவுன் காலத்தில் வாரம் ஒரு புது படம் பார்த்தே ஆக வேண்டும் என்றிருக்கும் சினிமா ரசிகர்களின் பசியை போக்கியது ஓடிடி தளங்களே. இந்த வகையில் ஓடிடி தளங்கள் வாரா வாரம் புது புது படங்களை வெளியிட்டு வருகிறது. அவை என்னென்ன படங்கள் என்று பார்க்கலாமா.

upcoming OTT Release This Week Movies: [ February 12 to February 17, 2024]

மிஷன் சாப்டர் 1: நடிகர் அருண் விஜய்யின் நடிப்பில், ஆக்சன், எமோஷனல் ஜேனரில் வெளிவந்த இந்த படத்தை ஏ.எல். விஜய் இயக்கியிருந்தார். இந்த படத்தில் அருண் விஜய்யுடன் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தியா மீதான தீவிரவாத தாக்குதல் மற்றும் அப்பா மகள் சென்டிமென்டை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மிஷன் சாப்டர் 1 வரும் 16 ஆம் தேதியன்று நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

upcoming OTT Release This Week Movies: [ February 12 to February 17, 2024]

சபாநாயகன்: தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனிக்கத்தக்க படங்களாகக் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வரும் நாயகன் அசோக் செல்வன் நடிப்பில் டிசம்பர் 15ந் தேதி இத்திரைப்படம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் இயக்கி உள்ளார். இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருந்தார். இந்திரைப்படம் பிப்ரவரி 14ந் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது.

upcoming OTT Release This Week Movies: [ February 12 to February 17, 2024]

ஹார்ட் பீட்( வெப் தொடர்): இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'ஹார்ட் பீட்' சீரிஸை வரும் மார்ச் 8ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. ஒரு மருத்துவமனையின் பின்னணியில் இளமை துள்ளும் காதல் கலந்து, ஜாலியான பொழுதுபோக்கு சீரிஸாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

upcoming OTT Release This Week Movies: [ February 12 to February 17, 2024]

ஆபிரகாம் ஓஸ்லர்(மலையாளம்): நடிகர் ஜெயராமின் மிரட்டலான நடிப்பில் டிசம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஆபிரகாம் ஓஸ்லர். சைக்கலாஜிக்கல் மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் படமாக எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலைப் பெற்றது.மிதுன் மானுவல் தாமஸ் இயக்கிய இப்படத்தில் மம்முட்டி ஜோசப் என்ற தொடர் கொலையாளியாக நடித்தார், அதே சமயம் ஜெயராம் முக்கிய பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். மேலும்,அதில், அனஸ்வர ராஜன், அர்ஜுன் அசோகன், அனுப் மேனன், ஆர்யா சலீம், சைஜு குருப், செந்தில் கிருஷ்ணா ஆகியோரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் அமேசான் பிரைமில் பிப்ரவரி 16ந் தேதி வெளியாக உள்ளது.

upcoming OTT Release This Week Movies: [ February 12 to February 17, 2024]

தி கேரளா ஸ்டோரி: விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிதப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு மே 5 ஆம் தேதி வெளியான திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. இந்தியில் உருவான இந்தத் திரைப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரையரங்கில் வெளியானது. மத வெறுப்பை தூண்டும் வகையில் இந்த திரைப்படம் இருப்பதாக கூறப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என இருவிதமான வரவேற்பை பெற்றன. நீண்ட நாட்களுக்கு பிறகு இத்திரைப்படம் ZEE5 ஓடிடி தளத்தில் பிப்ரவரி 16ந் தேதி வெளியாக உள்ளது.

upcoming OTT Release This Week Movies: [ February 12 to February 17, 2024]

நா சாமி ரங்கா(தெலுங்கு): விஜய் பின்னி இயக்கத்தில் நாகர்ஜூனாவின் நடிப்பில் பொங்கலுக்கு தியேட்டரில் வெளியானத் திரைப்படம் 'நா சாமி ரங்கா' இதில் நாகார்ஜுனா, அல்லரி நரேஷ், ராஜ் தருண், ஆஷிகா ரங்கநாத், ஷபீர் கல்லரக்கல் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிப்ரவரி 17, 2024 தேதி வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X