Upcoming OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் தரமான படங்களின் லிஸ்ட்!
சென்னை: லால் சலாம், மெர்ரி கிறிஸ்துமஸ் மற்றும் ஹனுமான் போன்ற திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாகி வசூலை அள்ளிய திரைப்படங்கள், இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ளன. தியேட்டரில் இந்த படத்தை தவறவிட்ட சினிமா பிரியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு படத்தை குடும்பத்தோடு பார்த்து ரசிக்கலாம்.
லால் சலாம்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த திரைப்படம் லால் சலாம்.

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவான இத்திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், லிவிங்ஸ்டன், விக்னேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு இன்னும் வெளியிடவில்லை.

மெர்ரி கிறிஸ்துமஸ்: ஸ்ரீராம் ராகவன் இயக்கிய திரைப்படம் மெர்ரி கிறிஸ்மஸ் ரொமான்ஸ் த்ரில்லர் திரைப்படமான இப்படத்தில், இதில் கத்ரீனா கைஃப், விஜய் சேதுபதி, டின்னு ராஜ் ஆனந்த், சஞ்சய் கபூர், வினய் பதக், பிரதிமா கண்ணன், ராதிகா ஆப்தே மற்றும் அஷ்வினி கல்சேகர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் மார்ச் 8ந் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹனுமான்: ஹனுமன் திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானிய மொழிகளில் ஜனவரி 12 ஆம் தேதி பொங்கலுக்கு ரிலீஸானது. அனுமன் படம் வெளியான நாளிலிருந்தே அமோக வரவேற்பை பெற்ற இத்திரைப்படம், ஜீ5 ஓடிடி தளத்தில் இந்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை படக்குழு இன்னும் வெளியிடவில்லை.

ப்ளூ ஸ்டார்: தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகானக விளங்கும் அசோக் செல்வன், சமீபத்தில் ஹீரோவாக நடித்திருந்த படம் ப்ளூ ஸ்டார். இந்த படத்தை, எஸ்.ஜெயகுமார் இயக்கியிருந்தார். ஜனவரி 25ந் தேதி வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் மார்ச் 1 ந் தேதியிலிருந்து டெண்ட்கொட்டா என்ற ஓடிடி தளத்தில் ஸ்டீமிங்காகி உள்ளது.

Super sex: சூப்பர்செக்ஸ் என்பது பிரபல இத்தாலிய ஆபாச திரைப்பட நடிகரான ரோக்கோ சிஃப்ரெடியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமாகும். இத்தாலியில் உள்ள ஓர்டோனாவைச் சேர்ந்த ஒரு எளிய மனிதர் எப்படி ஆபாசத் துறையில் மிகப்பெரிய பெயர்களில் ஒருவராக மாறினார் என்பதை வரவிருக்கும் வெப் தொடராகும். 7 அத்தியாயங்கள் கொண்ட இந்த தொடரை நெட்பிளிக்ஸ் தளத்தில் நாளை முதல் பார்க்கலாம்.

மகாராணி 3: 2012 ஆம் ஆண்டு கேங்க்ஸ் ஆஃப் வசேபூர் படத்தின் மூலம் நடிகையாக நடிகராக அறிமுகமான குரேஷி, டி-டே, தேத் இஷ்கியா மற்றும் பத்லாபூர் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் 'மகாராணி' என்ற தொடரில் லீட் ரோலில் நடித்துள்ளார்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளுங்கட்சி தவறான ஆட்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், முதல்வர் ராணி பார்தி (ஹூமா குரேஷி) நிலைமையைச் சமாளித்து தனக்குச் சாதகமாக மாற்றி வெற்றி பெறுகிறார் என்பது தான் கதை. இத்தொடர் மார்ச் 8ந் தேதி சோனிலிவ்வில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











