OTT Release Movies: ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ள திரைப்படங்கள்!

சென்னை: தியேட்டருக்கு சென்று குடும்பத்தோடு படம் பார்த்தால், பட்ஜெட் கட்டுபடி ஆகாது என்று புலம்புபவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது ஓடிடி தளங்கள். ஒரு வருட சந்தாவை கட்டிவிட்டு குடும்பத்தோடு நினைத்த நேரத்தில் படத்தைப் பார்த்து மகிழ்கின்றனர். அப்படிப்பட்ட சினிமா பிரியர்களுக்காக வரந்தோறும் ஓடிடித்தளங்கள் பல திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

கல்கி: நாக் அஸ்வின் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ படமாக உருவான கல்கி படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமலஹாசன், தீபிகா படுகோன் ஆகியோர் நடித்துள்ளனர். அதிக பட்ஜெட்டில் உருவான இப்படம், ஜூன் 27ஆம் தேதி உலகளவில் வெளியாகி வரவேற்பை பெற்றது. பல ட்விஸ்ட்களை கொண்ட இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி 7 முதல் 8 வாரங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 15 ஆம் தேதி தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட பதிப்பாக அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

OTT Release This week movies OTT

Dune 2: இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்களில் ஒன்றான 'டூன்: பார்ட் டூ' திரைப்படம் ஃபிராங்க் ஹெர்பர்ட்டின் 1965 ஆம் ஆண்டு வெளியான அறிவியல் புனைகதை நாவலின் தழுவலாக எடுக்கப்பட்ட 'டூன்: பார்ட் ஒன்' படத்தின் தொடர்ச்சியாகும். இத்திரைப்படம் கடந்த மார்ச் மாதம் திரையரங்கில் வெளியான நிலையில் இப்படம் ஜீசினிமா ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழியில் ஆகஸ்ட் 1ந்தேதி வெளியாக உள்ளது.

OTT Release This week movies OTT

Kingdom of the Planet of the Apes: ஜோஷ் ஃபிரைட்மேன் எழுதி வெஸ் பால் இயக்கிய திரைப்படம் கிங்டம் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ் அறிவியல் புனையப்பட்ட கதையாகும். இப்படம் வெஸ் பால், ஜோ ஹார்ட்விக் ஜூனியர், ரிக் ஜாஃபா, அமண்டா சில்வர் மற்றும் ஜேசன் டி. ரீட் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. காஸ்டிங் ஓவன் டீக், ஃப்ரேயா ஆலன், கெவின் டுராண்ட், பீட்டர் மேகன், வில்லியம் எச். மேசி இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். தியேட்டரில் வசூலை அள்ளிய கிங்டம் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ் படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஆகஸ்ட் 2ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடத்தில் வெளியாக உள்ளது.

OTT Release This week movies OTT

Munjya: நகைச்சுவை மற்றும் திகிலூட்டும் திரைப்படமான முஞ்யா திரைப்படம் ஜூன் 7 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபிசில் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இப்படத்தை, ஆதித்யா சர்போத்தர் இயக்கி இருந்தார். இதில் அபய் வர்மா, ஷர்வரி, மோனா சிங், சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். மடாக் பிலிம்ஸ் பேனரின் கீழ் தினேஷ் விஜன் மற்றும் அமர் கௌசிக் ஆகியோர் தயாரித்த இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஆகஸ்ட் 1ந் தேதி வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X