ஓடிடியில் வெளியாக உள்ள படங்களில் லிஸ்ட்.. எந்த படத்தை எந்த தளத்தில் பார்க்கலாம்?
சென்னை: கடந்த வாரம் சுதந்திர தினத்தை முன்னிட்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான விக்ரம் நடித்த தங்கலான், அருள்நிதி நடித்த டிமான்டி காலனி 2, கீர்த்தி சுரேஷ் நடித்த ரகுதாதா திரைப்படங்கள் வெளியானது. இதில் டிமான்டிகாலனி 2 திரைப்படம் நல்ல வசூலை அள்ளி வருகிறது. அதுமட்டுமில்லாமல் நாளை வாழை, கொட்டுக்காளி ஆகிய படங்கள் தியேட்டரில் வெளியாக இருக்கும் நிலையில் ஓடிடியில் வெளியாக இருக்கும் படங்களின் விவரங்களை பார்க்கலாம்.
ராயன் : நடிகர் தனுஷ் இயக்கி நடித்த திரைப்படம் ராயன். இதில், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியானது. கேங்ஸ்டர் ஜானரில் அதிரடி ஆக்ஷன் படமாக வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல கலெக்ஷன் அள்ளியன இப்படம், ஆகஸ்ட் 23ம் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.

கல்கி: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 'கல்கி 2898AD' திரைப்படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. மிக பெரிய பொருட்செலவில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் 100 கோடியையும் தாண்டி வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படம் வரும் ஆகஸ்ட் 22ம் தேதியன்று அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

ஜமா: தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து உருவான படம் 'ஜமா'. இயக்குநர் பாரி இளவழகன் இந்தப் படத்தை இயக்கி, முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அம்மு அபிராமி கதாநாயகியாக நடித்துள்ளார். கூழாங்கல்' படத்தை தயாரித்த 'Learn & Teach Production'நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இத்திரைப்படம் ஆகஸ்ட் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் அமேசான் பிரைம் ஓடிடியில் இப்படம் வெளியாக உள்ளது.

Unarvugal Thodarkathai : பாலு சர்மா இயக்கிய காதல் திரைப்படம் தான் உணர்வுகள் தொடர்கதை. இதில், ஹிருஷிகேஷ் , ஷெர்லின் சேத், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மார்ச் மாதம் தியேட்டரில் வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், இப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் நாளை வெளியாக உள்ளது.

விராஜி: அமானுஷ்ய த்ரில்லர் பாணியில் உருவான இத்திரைப்படம் விராஜி. கடந்த மாதம் தியேட்டரில் வெளியான இப்படத்தை. நாளை முதல் ஆஹா தளத்தில் பார்க்கலாம். அதியந்த் ஹர்ஷா எழுதி இயக்கிய வருண் சந்தேஷ், பிரபாகர்,குஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர்.

கிர்: காமெடி டிராமாவாக உருவாகியிருக்கும் படம், கிர்ர் (Grr). இதில் அனாகா, குஞ்சுக்கோ போபன், ஸ்ருதி ராமச்சந்திரர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். த்ரில்லிங்கான அனுபவங்கள் வேண்டும் என்று பயணிக்கும் சிலரின் வாழ்க்கை குறித்து காமெடியாக கூறப்பட்டிருக்கும் படம்தா, கிர். இந்த மலையாள படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் நாளை பார்க்கலாம்.
முஞ்சியா: வருண் தவான், சத்யராஜ், ஷர்வாரி, அபய் வர்மா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ஹாரர்-த்ரில்லர் படம், முஞ்சியா. இந்தி மொழியில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ஸ்டார் கோல்ட் தளத்தில் நாளை முதல் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











