Upcoming OTT Release: பெருசா ஒன்னும் இல்ல ஏமாற்றம் தான்.. இந்த வார ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
சென்னை: கடந்த வாரம் ஓடிடியில், தனுஷ் நடித்த ராயன், நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன் நடித்த கல்கி 2898AD, அம்மு அபிராமி கதாநாயகியாக நடித்த ஜமா, பாலு சர்மா இயக்கிய உணர்வுகள் தொடர்கதை, விராஜி, கிர் என பலத்திரைப்படங்கள் வெளியானது. ஆனால், இந்த வாரம் ஓடிடியில் பெரிதாக எந்த படமும் வெளியாக வில்லை.

Mafia Don Returns: ஷ்ரவண் திவாரி இயக்கிய, முர்ஷித், கே கே மேனன் நடித்துள்ள வெப் தொடர் Mafia Don Returns. இத்தொடரில், முர்ஷித்தின் வளர்ப்பு மகனாக தனுஜ் விர்வானியும், அவரது எதிரி ஃபரித் ஆக ஜாகிர் ஹுசைனும், ஜெயேந்திர ராவாக ராஜேஷ் ஷிங்கர்புரேவும் நடித்துள்ளனர். இத்தொடர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி Zee5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

மனமே: தெலுங்கு மொழி நகைச்சுவைத் திரைப்படமான மனமே நேற்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனத்தை பெற்றது. ஷர்வானந்த், கிருத்தி ஷெட்டி, விக்ரம் ஆதித்யா, வெண்ணெலா கிஷோர், சீரத் கபூர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

Abigail: அபிகாயி ஒரு திகில் நகைச்சுவை திரைப்படமாகும். இப்படத்தில், மெலிசா பாரேரா, அலிஷா வீர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏப்ரல் 7ந் தேதி தியேட்டரில் வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தை ZEE5, Amazon Prime Video, Vudu ஆகிய தளத்தில் பார்க்கலாம்.

IC 814: The Kandahar Hijack: ஆறு எபிசோடுகளை கொண்ட வெப் தொடர் தான் IC 814: The Kandahar Hijack. அனுபவ் சின்ஹா இயக்கி, பெனாரஸ் மீடியாவொர்க்ஸுடன் இணைந்து மேட்ச்பாக்ஸ் ஷாட்ஸ் தயாரித்த இந்தத் தொடர், கேப்டன் தேவி ஷரன் மற்றும் ஸ்ரீஞ்சோய் சௌத்ரியின் "ஃபிளைட் இன்டூ ஃபியர்" புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது.

1999 ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 கடத்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகள் குறித்து இந்த தொடரில் விரிவாக கூறப்பட்டுள்ளது. இந்த தொடரை நெட்பிளிக்ஸ் தளத்தில் ஆகஸ்ட் 29ந் தேதி முதல் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











