Ott This week: வீக் எண்ட் மோட் ஆன்.. இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ள படங்கள் என்னென்ன!
சென்னை: ஒடிடி தளங்களின் வளர்ச்சியால் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் பொதுமக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. எவ்வளவு பெரிய நடிகரின் படமாக இருந்தாலும், தியேட்டரில் வெளியான 4 வாரங்களில் அந்த படம் ஒடிடி தளத்தில் வெளியாகிவிடும் என்பதால், பலர் வீட்டில் இருந்தபடியே குடும்பத்துடன் படத்தை பார்த்து விடுகின்றனர்.
அப்படி ஓடிடியில் படம் பார்ப்பவர்களை தக்கவைத்துக்கொள்ள ஓடிடி தளங்கள் போட்டி போட்டுக்கொண்டு வாரா வாரம் படத்தை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் என்னென்ன திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்று பார்க்கலாம்.
ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான திரைப்படம் அன்னபூரணி. நயன்தாராவின் 75வது திரைப்படமான இப்படத்தில், டிசம்பர் 1ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம். அதேபோல ஹரிஷ் கல்யாண், எம் எஸ் பாஸ்கர் நடித்த பார்க்கிங் திரைப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணலாம்.
![upcoming OTT Release This Week Tamil Movies: [ January 1 to January 7, 2024] upcoming OTT Release This Week Tamil Movies: [ January 1 to January 7, 2024]](https://images.filmibeat.com/ta/img/2024/01/screenshot425-1704095007.jpg)
கான்ஜூரிங் கண்ணப்பன்: அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்து டிசம்பர் 8ஆம் தேதி வெளியான திரைப்படம் கான்ஜூரிங் கண்ணப்பன். இந்த படத்தில், சதீஷ் உடன் இணைந்து சரண்யா பொன்வண்ணன், ரெஜினா, நாசர், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஏ.ஜி.எஸ் எண்டர்டைமெண்ட் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இத்திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஜனவரி 5ந் தேதி வெளியாக உள்ளது.
![upcoming OTT Release This Week Tamil Movies: [ January 1 to January 7, 2024] upcoming OTT Release This Week Tamil Movies: [ January 1 to January 7, 2024]](https://images.filmibeat.com/ta/img/2024/01/screenshot426-1704094999.jpg)
ஹாய் நான்னா: இயக்குநர் சவுர்யா இயக்கத்தில் டோலிவுட்டின் நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் சீதா ராமம் புகழ் நடிகை மிருணாள் தாகூர் நடித்த ஹாய் நான்னா திரைப்படம் டிசம்பர் 7ம் தேதி திரையரங்குகளில் பான் இந்தியா படமாக வெளியானது. தெலுங்கில் நல்ல வரவேற்பு பெற்றது. தந்தை பாசம், காதல் என எமோஷன்களின் வெளியான இத்திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி ஜனவரி 4ம் தேதி வெளியாக உள்ளது.
![upcoming OTT Release This Week Tamil Movies: [ January 1 to January 7, 2024] upcoming OTT Release This Week Tamil Movies: [ January 1 to January 7, 2024]](https://images.filmibeat.com/ta/img/2024/01/screenshot427-1704094990.jpg)
தேஜஸ்: சர்வேஷ் மேவாரா இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ள படம் தேஜஸ். ரோனி ஸ்க்ரூவாலா தயாரித்துள்ள இப்படத்தில் அன்சுல் சவுகான், ஆசிஷ் வித்யார்த்தி, விஷாக் நாயர் உட்பட பலர் நடித்துள்ளனர். ஷஷ்வத் சச்தேவ் இசை பணிகளை மேற்கொண்டுள்ளார். போர் விமானங்களை ஓட்டும் பெண் விமானியாக கங்கனா நடித்துள்ள இப்படம் அக்டோபர் 27ஆம் தேதி வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இந்த படம் போதிய வரவேற்பை பெறவில்லை.இந்நிலையில் இத்திரைப்படம் ஜனவரி 5ந் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
கோடபொம்மாலி பிஎஸ்: இயக்குனர் தேஜா மார்னி இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராகுல் விஜய், வரலட்சுமி சரத்குமார், ஷிவானி ராஜசேகர் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் கோடபொம்மாலி பிஎஸ். பன்னி வாஸ், வித்யா கோப்பிநீடி தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ளார். மூத்த போலீஸ் அதிகாரியை சுற்றி நடக்கும் இத்திரைப்படம் கணிசமான வசூலை அள்ளியது. இப்படம் ஆஹா ஒடிடி தளத்தில் ஜனவரி 5ஆம் தேதி வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











