OTT Release: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

சென்னை: ஒவ்வொரு வார இறுதியிலும் புது புது படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாவதால், மக்கள் திரையரங்குகளில் வெளியாகும் படங்களை பொறுத்திருந்து ஓடிடி தளத்திலேயே குடும்பத்துடன் பார்த்து மகிழ்கின்றனர். இந்த வகையில் நீங்கள் தியேட்டரில் தவறவிட்ட படங்களை ஓடிடியில் பார்த்து மகிழலாம். அந்த வகையில் இன்று என்னென்ன படங்கள் என்று பார்க்கலாம்.

சட்னி சாம்பார் : வெள்ளித்திரையில் கலக்கி வந்த நடிகர் யோகி பாபு தற்போது, 'சட்னி சாம்பார்' என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடரில் வாணி போஜன், மைனா நந்தினி, தீபா சங்கர், சம்யுக்தா விஸ்வநாத், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். ராதாமோகன் இயக்கி உள்ள இந்த 'சட்னி சாம்பார்' என்ற வெப் தொடர் வருகிற 26ந் தேதி முதல் டிஸ்னி பிளாஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது.

OTT Release This week movies OTT

Bloody Ishq (இந்தி): வர்தன் நடிப்பில் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் Bloody Ishq. இப்படத்தில். பூரி மற்றும் அவிகா கோர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹாரர் மேஸ்ட்ரோ விக்ரம் பட் இயக்கிய இந்த படத்தை மகேஷ் பட் தயாரித்துள்ளார். மறதி நோயுடன் போராடும் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவத்தை இயக்குநர் மிகவும் சுவாரசியமாக கொடுத்துள்ளார். இத்திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஜூலை 26ந் தேதி வெளியாகிறது.

OTT Release This week movies OTT

Bharatanatyam (தெலுங்கு): ஏப்ரல் மாதம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற இத்திரைப்படம் ஜூலை 27 ந் தேதி ஆஹாவில் ஸ்ட்ரீமிங்காக உள்ளது. இப்படத்தில் ஹர்ஷ வர்தன், அஜய் கோஷ் மற்றும் ஹர்ஷவர்தன் போன்றோர் நடித்துள்ளனர். மேலும் முக்கிய வேடத்தில் நாயகியாக மினாக்ஷி கோஸ்வாமி நடித்துள்ளார். சூர்யா தேஜ் இப்படத்தில் ஹீரோவாக நடித்தது மட்டுமில்லாமல் கதை எழுதியதோடு, திரைக்கதை மற்றும் வசனங்களையும் இயக்குனர் கே.வி.ஆர்.மகேந்திராவுடன் இணைந்து செய்துள்ளார்.

OTT Release This week movies OTT

Bhaiyya Ji (இந்தி) : மனோஜ் பாஜ்பாயின் 100வது திரைப்படம் Bhaiyya Ji. ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் உருவான இத்திரைப்படம் மே மாதம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படம் தியேட்டரில் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஜீ5 தளத்தில் 26ந் தேதி அதாவது வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.தியேட்டரில் இப்படத்தை தவறவிட்டவர்கள் ஓடிடியில் பார்க்கலாம்.

OTT Release This week movies OTT

Manorama Max(மலையாளம்): மலையாளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான நகைச்சுவை சஸ்பென்ஸ் திரைப்படம் மனோரமா மேக்ஸ். இப்படத்தை திலீப் தயாரித்து அவரே நடித்திருந்தார். ஜானி ஆண்டனி, ராதிகா சரத்குமார், தர்மஜன் போல்காட்டி, ஸ்படிகம் ஜார்ஜ் ஆகியோருடன் ஜூஹி ஜெயக்குமார், ஸ்ரேயா ருக்மணி, ரோஸ்மின், சுவாதி, திலீனா ராமகிருஷ்ணன் ஆகிய புதுமுகங்களும் நடித்துள்ளனர். அரவிந்தனின் கெஸ்ட் படத்திற்குப் பிறகு ராஜேஷ் ராகவன் திரைக்கதை அமைத்துள்ளார்.இப்படம் மனோரமா ஓடிடி தளத்தில் 26ந் தேதி வெளியாக உள்ளது

OTT Release This week movies OTT

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X