OTT Release: ஜவான் முதல் இறுகப்பற்று வரை.. இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் என்னென்ன?

சென்னை: மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம் லியோ திரைப்படம் வெளியானதால் ஓடிடியில் எந்த படமும் வெளியாகவில்லை.

தற்போது லியோ பீவர் சற்று குறைந்து உள்ளதால் இந்த வாரம் ஓடிடியில் பல திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் வெளியாக உள்ளன. அவை என்னென்ன என்று இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஜவான்: ஷாருக்கான், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடித்த ஜவான் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அட்லீ இயக்கிய பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்த ஜவான் படம் உலகம் முழுவதும் 1125 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இத்திரைப்படம் ஷாருக்கானின் பிறந்தநாளான நவம்பர் இரண்டாம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.

Upcoming OTT Release This Week Tamil Movies: November 1 to November 5 2023

இறுகப்பற்று: யுவராஜ் தயாளன் இயக்கத்தில் கடந்த அக்டேபர் 6 ஆம் தேதி வெளியான படம், இறுகப்பற்று. இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா கபூர், சானிய ஐயப்பன், விதார்த், ஸ்ரீ உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படம் நவம்பர் 3ந் தேதி பிரபல ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிள்க்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

Upcoming OTT Release This Week Tamil Movies: November 1 to November 5 2023

ஆர்யா சீசன் 3: ஆர்யா வெப் தொடர் தனது கணவனைக் கொன்றவர்களை பழிவாங்கும் விதவையைச் சுற்றி நடக்கும் கதையாகும். இந்த தொடரில் சுஷ்மிதா சென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சந்திரச்சூர் சிங், வீரேன் வஜிராணி, விர்தி வகானி, ஆருஷி பஜாஜ், பிரத்யக்ஷ் பன்வார் மற்றும் ஜெயந்த், கிருபாலானி முக்கிய வேடங்களில் நடித்துள்ள இத்தொடர் நவம்பர் 3ந் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது.

ஸ்கேம் 2003: 2003 முத்திரைத்தாள் மோசடி வழக்கில் சிக்கிய அப்துல் கரீம் தெல்கியை மையமாக வைத்து இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அப்துல் கரீம் தெல்கியாக ககன் தேவ் ரியார் நடித்துள்ளார். முகேஷ் திவாரி, சனா அமின் ஷேக், பாரத் ஜாதவ் மற்றும் ஷாத் ரந்தாவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதன் இரண்டாவது பகுதி நவம்பர் 3 அன்று SonyLiv ல் ஒளிபரப்பாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X