OTT Releases This Week: தளபதியின் லியோ முதல் சாவர் வரை ஒடிடியில் வெளியாகும் படங்கள்!
சென்னை: சினிமா பிரியர்களை கவரும் வகையில், ஓடிடி தளங்கள் வாரம் தோறும் பல திரைப்படங்களை வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில் வசூலை அள்ளிய பலத்திரைப்படங்களை டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, சோனிலிவ் மற்றும் ஜீ5 போன்ற ஓடிடி தளங்கள் பல திரைப்படங்களை திரையிட உள்ளன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.
![Upcoming OTT Release This Week Tamil Movies: [november 23 to november 29th] Upcoming OTT Release This Week Tamil Movies: [november 23 to november 29th]](https://images.filmibeat.com/ta/img/2023/11/ott-down-1700740383.jpg)
லியோ: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த மாதம் திரையரங்கில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வசூலை அள்ளிய நிலையில், இந்த படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை (நவம்பர் 24) வெள்ளியன்று ரிலீசாகிறது. தியேட்டர் எடிஷனை விட இதில் கூடுதல் காட்சிகள் இருக்கும் என்று கூறப்படுவதால் ரசிகர்கள் இதனை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
தி வில்லேஜ்: இயக்குனர் மிலண்ட் ராவ் இயக்கத்தில், ஆர்யாவின் வித்யாசமான திகில் திரைப்படத்தில் நடித்துள்ள தி வில்லேஜ் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைமில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியாக உள்ளது. இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக, திவ்யா பிள்ளை நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன், முத்துக்குமார், தலைவாசல் விஜய், ஜான் கோகென், ஜார்ஜ் மரியான், ஆழியா, கலைராணி, ஜெயப்பிரகாஷ், உள்ளிட்ட பல நடித்துள்ளனர்.
![Upcoming OTT Release This Week Tamil Movies: [november 23 to november 29th] Upcoming OTT Release This Week Tamil Movies: [november 23 to november 29th]](https://images.filmibeat.com/ta/img/2023/11/f-m45tna4aanb82-down-1700740002.jpeg)
சத்திய சோதனை: காவல் நிலையத்தில் கொலை வழக்கு விசாரணை எப்படி நடைபெறுகிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டிய திரைப்படம் சத்திய சோதனை. திரைப்படம் நவம்பர் 24 முதல் சோனிலிவில் ஒளிபரப்பாக உள்ளது. இப்படத்தை சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரேம்ஜி அமரன், சவாயம் சித்தா மற்றும் ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது ஜூலை 21 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
![Upcoming OTT Release This Week Tamil Movies: [november 23 to november 29th] Upcoming OTT Release This Week Tamil Movies: [november 23 to november 29th]](https://images.filmibeat.com/ta/img/2023/11/sathiya-sothanai-down-1700740012.jpg)
பகவந்த் கேசரி: டோலிவுட்டின் மூத்த நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா அடுத்தடுத்து மாஸ் ஹிட் படங்களை கொடுத்து வருகிறரர். கடந்த மாதம் தசரா பண்டிகையை முன்னிட்டு நடிகர் அனில் ரவிபுடியின் இயக்கத்தில் பகவந்த் கேசரி திரைப்படம் வெளியாகி வசூலை அள்ளியது. இப்படம் வெளியாகி ஒருமாதமான நிலையில் இப்படத்தை நாளை முதல் அமேசான் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
![Upcoming OTT Release This Week Tamil Movies: [november 23 to november 29th] Upcoming OTT Release This Week Tamil Movies: [november 23 to november 29th]](https://images.filmibeat.com/ta/img/2023/11/f-mol3-aeaappvs-down-1700740194.jpeg)
சாவர்: தினு பாப்பச்சன் இயக்கிய மலையாளத்தில் அதிரடி அரசியல், திரில்லர் பாணியில் உருவான திரைப்படம் சாவர். இப்படம் OTT வெளியீடு நவம்பர் 24 அன்று SonyLiv இல் திரையிடப்பட உள்ளது. இதில் குஞ்சாக்கோ போபன், ஆண்டனி வர்கீஸ், அர்ஜுன் அசோகன் மற்றும் சஜின் கோபு ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த மாதம் திரையில் வெளியானத் இத்திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வசூலை அள்ளியது.


Click it and Unblock the Notifications











