OTT Release Movies: வசூலில் மாஸ் காட்டிய கோட்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் மூவிஸ்!

சென்னை: நல்ல சினிமாவை தேடி தேடிப் பார்ப்பவர்களுக்கு கடந்த வாரம் அடித்தது ஜாக்பார்ட் என்பது போல, மெய்யழகன், தேவாரா, பேட்ட ராப், ஹிட்லர், சட்டம் என் கையில் என அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளியானது. இதில் கார்த்திக் நடித்த மெய்யழகன் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்தநிலையில், இந்த வாரம், அமேசான், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார், ஜீ5 போன்ற ஓடிடி தளத்திலும் பல திரைப்படங்கள் வெளியாக உள்ளது. அது என்னென்ன என்று பார்க்கலாமா?

கோட்: 450க்கும் வசூலை அள்ளிய கோட் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் கோட். இப்படம் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. இதில் மீனாட்சி சவுத்ரி, சினேகா, பிரசாந்த், மோகன், பிரபுதேவா, திரிஷா, யோகி பாபு, பிரேம்ஜி என பலர் நடித்திருந்தனர். இப்படம் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் அக்டோபர் மூன்றாம் தேதி வெளியாக உள்ளது. கோட் படம் தியேட்டரில் 3மணி நேரம் ஓடிய நிலையில், 4 மணி நேரமாக வெளியாக உள்ளது கூறப்படுகிறது.

ott release this week movies

போட்: சிம்பு தேவன் இயக்கத்தில் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் போட். ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி வெளியான இத்திரைப்படத்தில், யோகி பாபுவுடன் கவுரி கிஷன், மதும்கேஷ், எம்.எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த், ஜெசி, சாம்ஸ், மதுமிதா, ஷா ரா, மற்றும் பலர் நடித்திருந்தனர். கலவையான விமர்சனத்தை பெற்ற இத்திரைப்படம், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேற்று வெளியானது. இப்படத்தை தியேட்டரில் தவறவிட்டவர்கள் ஓடிடியில் பார்க்கலாம்.

ott release this week movies

35 சின்ன விஷயம் அல்ல: நிவேதா தாமஸ் நடிப்பில் அண்மையில் வெளியானம் திரைப்படம் , 35 சின்ன விஷயம் அல்ல. பாக்ஸ் ஆபிஸில் சரியான வசூலை பெறமுடியவில்லை என்றாலும், இப்படம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது. இப்படம், செப்டம்பர் 27ந் தேதி தியேட்டரில் வெளியான நிலையில், இப்படம், இன்று ஆஹா ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

ott release this week movies

தி சிக்னேச்சர்: பழம்பெரும் நடிகர் அனுபம் கெர் 525வது திரைப்படமாக வெளியாகி உள்ளது 'தி சிக்னேச்சர்' இப்படத்தில் மஹிமா சவுத்ரி, நீனா குல்கர்னி, அன்னு கபூர் மற்றும் ரன்வீர் ஷோரே ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தில் மனைவிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால், கணவன் மனைவில் உறவில் ஏற்படும் உணர்ச்சி மற்றும் மருத்துவ அழுத்தத்தை எதிர்கொள்ளும் காட்கி அப்பட்டமாக காட்டப்பட்டுள்ளது. 'தி சிக்னேச்சர்' ஜீ5 ஓடிடி தளத்தில் அக்டோபர் 4ந் தேதி வெளியாக உள்ளது.

ott release this week movies

பாலு கனி டாக்கீஸ்: தெலுங்கு திரைப்படமான பாலு கனி டாக்கீஸ் அக்டோபர் 4ந் தேதி முதல் ஆஹா ஒடிடி தளத்தில் பார்க்கலாம். இதில், சிவ ராம சந்திரவரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் சரண்யா ஷர்மா, ரகு குஞ்சே, சுதாகர் ரெட்டி, வம்ஷி நெக்கண்டி, சுரேஷ் பூஜாரி மற்றும் சேகர் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர், நகைச்சுவை மற்றும் நாடகத்தின் கலவையான கலவையை விமர்சனத்தை பெற்றது.

ott release this week movies

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X