OTT Release Movies: இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ள படம்.. மிஸ் பண்ணாம பாருங்க!

சென்னை: சினிமா விரும்பிகளுக்கு இது ஒரு சூப்பரான வாரம் என்றே சொல்லலாம். இந்த வாரம் தியேட்டரில் மெய்யழகன், தேவாரா, பேட்ட ரப், ஹிட்லர், சட்டம் என் கையில் என அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளியாக உள்ளநிலையில், அமேசான், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார், ஜீ5 போன்ற ஓடிடி தளத்திலும் பல திரைப்படங்கள் வெளியாக உள்ளது. அது என்னென்ன என்று பார்க்கலாமா?

டிமான்டி காலனி 2: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்டோர் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் டிமான்டி காலனி. மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாம் 9 ஆண்டுகள் கழித்து கடந்த மாதம் தியேட்டரில் வெளியானது. டிமான்டி காலனி 2வில், அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அர்ச்சனா, அருண் பாண்டியன் ஆகியோர் நடித்திருந்தனர்.பெரும் வசூலை அள்ளிய இத்திரைப்படம் வரும் 27ந் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

ott release this week movies ott

கொட்டுக்காளி: பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி அன்னா பென் நடித்துள்ள கொட்டுக்காளி கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கணிசமான வசூலைப்பெற்ற இத்திரைப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி அமேசான் பிரை மற்றும் சிம்பிலி சவுத் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளது. மேலும், 97வது ஆஸ்கர் விருதுக்கு இதில், மகாராஜா, கொட்டுக்காளி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், வாழை, தங்கலான், ஜமா ஆகிய 6 தமிழ் திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில் பல சர்வதேச விருதுகளை பெற்ற கொட்டுக்காளி படம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ott release this week movies ott

காபி: இயக்குநர் சாய் கிருஷ்ணா எழுதி இயக்கிய திரைப்படம் காபி. இப்படத்தில், இனியா, ரகுல் தேவ், சௌந்தரராஜன், ராமச்சந்திரன் துரைராஜ், மற்றும் முகதா கோட்சேட் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படம் 2022ஆம் ஆண்டு வெளியான காபி வரும் 27ந் தேதி ஆஹா ஓடிடியில் வெளியாக உள்ளது.

ott release this week movies ott

சூர்யா'ஸ் சாட்டர்டே: நானி மற்றும் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பில் கடந்த மாதம் வெளியானத் திரைப்படம் சூர்யா'ஸ் சாட்டர்டே. இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கி இத்திரைப்படம் முதல் நாளிலேயே நல்ல விமர்சனத்தை பெற்றது. படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை அள்ளிய இத்திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் இப்படத்தை பார்க்கலாம்.

ஸ்ட்ரீ 2: ராஜ்குமார் ராவ் மற்றும் ஷ்ரத்தா கபூர் நடித்துள்ள திரைப்படம் 'ஸ்ட்ரீ 2' பாக்ஸ் ஆபிஸில் ரூ.580 கோடி சாதனைப்படைத்த இத்திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் செப்டம்பர் 27ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை மேடாக் பிலிம்ஸ் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் கீழ் தினேஷ் விஜன் மற்றும் ஜோதி தேஷ்பாண்டே ஆகியோர் தயாரித்துள்ளனர்.

ott release this week movies ott

பிரதிநிதி 2: நடிகர் நாரா ரோஹித்தின் நடிப்பில் கடந்த மாதம் தியேட்டரில் வெளியான படம் பிரதிநிதி 2. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் தோல்வி அடைந்தது. இப்படத்தை அறிமுக இயக்குனர் வெங்கடேஷ் நிம்மலபுடி இயக்கினார். பிரதிநிதி 2 தோல்விப்படமாக அமைந்தாலும், நடிகர் நாரா ரோஹித்தின் நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள். இப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி ஆஹாவில் வெளியாக உள்ளது. தியேட்டரில் இப்படத்தை தவறவிட்டவர்கள் இப்படத்தை ஓடிடியில் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X