எந்தெந்த படங்கள்.. எந்தெந்த ஓடிடியில் ரிலீஸ்.. படங்களின் முழு பட்டியல் !

சென்னை : திரையரங்குகளில் ஒவ்வொரு வாரமும் மூன்று அல்லது நான்கு தமிழ் படங்கள் ரிலீசாகி வரும் நிலையில் அதே அளவிற்கு ஓடிடியிலும் புதிய படங்களும் ஏற்கனவே திரையரங்கில் ரிலீஸ் ஆன படங்களும் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் ஜூன் மாதம் டான், ஜன கண மன, கூகுள் குட்டப்பா, நயன்தாரா நடித்த 'O2' உள்ளிட்ட திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகும் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

எந்ததெந்த திரைப்படங்கள் எந்தெந்த தேதிகளில் எந்தெந்த தளங்களில் ரிலீஸ் ஆக உள்ளன என்பதை தெரிந்துகொள்ளலாம்.

ஜன கண மன

ஜன கண மன

மலையாளத்தில் பிருத்விராஜ் மற்றும் சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ள ஜன கண மன திரைப்படம் நெட்ஃபிக்ஸ் தளத்தில் ஜூன் 2 வெளியாக உள்ளது. குயின்ஸ் இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கிய இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் மம்தா மோகன்தாஸ், ஸ்ரீ திவ்யா துருவன், ஷாரி, ஷம்மி திலகன், ராஜா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

டான்

டான்

சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'டான்' படம் ஜூன் 10-ஆம் தேதி நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 'லைகா ப்ரொடக்ஷன்ஸ்' தயாரித்துள்ள இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

கூகுள் குட்டப்பா

கூகுள் குட்டப்பா

மலையாளத்தில் 2019ம் ஆண்டு வெளிவந்து 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25' படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த கூகுள் குட்டப்பா. இப்படத்தை அறிமுக இயக்குனர்கள் சபரி சரவணன் இயக்கினார். இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், தர்ஷன்,லாஸ்லியா ஆகியோர் நடித்துள்ளார்.கடந்த மாதம் திரையரங்கில் வெளியான இப்படம் ஜூன் 3ந் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

ஐங்கரன்

ஐங்கரன்

ஜி.வி பிரகாஷ் நடிப்பில் ஐங்கரன் மே 12 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி கவனம் ஈர்த்தது. 'ஈட்டி' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ரவி அரசு இயக்கியுள்ள இப்படத்தில், மஹிமா நம்பியார், காளி வெங்கட் உள்ளிட்ட படர் நடித்திருந்தனர். ஜூன் 10ந் தேதி தேதி ஆஹா ஓடிடி தளத்தில் ஐங்கரன்வெளியாகவுள்ளது.

'நெஞ்சுக்கு நீதி'

'நெஞ்சுக்கு நீதி'

உதயநிதி நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் மே 20ந் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்தியில் வெளியான 'ஆர்டிக்கள் 15' படத்தின் ரீமேக்கான இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் ஜூன் 17ந் தேதி வெளியாக உள்ளது.

O2

O2

நயன்தாரா நடித்துள்ள ஆக்ஸிஜன் (O2) படத்தை வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்த ஜி.கே. விக்னேஷ் இயக்கி உள்ளார். இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஜூன் மாதம் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் அறிவித்துள்ளது. ஆனால் தேதி குறித்த அறிவிப்பு வெளியாக வில்லை.

மைதான் (இந்தி)

மைதான் (இந்தி)

'பதாய் ஹோ' திரைப்படத்திற்கு பிறகு, இயக்குநர் அமித் ரவீந்தர்நாத் சர்மா இயக்கிய திரைப்படம் மைதான். கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும் இப்படத்தில், அஜய் தேவ்கன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். போனி கபூர், ஆகாஷ் சாவ்லா மற்றும் அருணவா ஜாய் சென்குப்தா ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படம் ஜூன் 3ந் தேதி நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

Hustle

Hustle

ஜெரிமியா ஜாகர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'Hustle' நெட்ஃபிக்ஸ் ஜூன் 8ந் தேதி வெளியாக உள்ளது. கூடைப்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த திரைப்படத்தில் ஆடம் சாண்ட்லர், குயின் லதிஃபா, பென் ஃபோஸ்டர், ராபர்ட் டுவால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Peaky Blinders Season 6

Peaky Blinders Season 6

அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பீக்கி பிளைண்டர்ஸ் சீசன் 6 ஜூன் 10ந் தேதி நெட்ஃபிக்ஸில் வெளியாக உள்ளது. இந்தத் தொடரில் சிலியன் மர்பி, ஹெலன் மெக்ரோரி, பால் ஆண்டர்சன், சோஃபி ரண்டில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த வெப்தொடரை ஸ்டீவ் நைட் உருவாக்கியுள்ளார்.

CBI 5 The Brain

CBI 5 The Brain

இயக்குநர் கே முது இயக்கத்தில் உருவான க்ரைம் த்ரில்லிங் படம் தான் CBI 5 The Brain. இத்திரைப்படத்தில் மம்முட்டி, ரஞ்சித் பனிகர், சசிக்குமார் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். மே 1ந் தேதி வெளியான இத்திரைப்படம் நெட்ஃபிக்ஸ் ஜூன் மாதம் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X