ஹாட்ஸ்டாரில் வெளியாகும் புது வெப் சீரிஸ் உப்பு புளி காரம்.. எப்போ ரிலீஸ் தெரியுமா?

சென்னை: மத்தகம், லேபிள், ஹார்ட் பீட் என தொடர்ந்து புது புது இணையத் தொடர்களை வழங்கி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் உப்பு புளி காரம் எனும் பெயரில் புதிய இணைய தொடரை உருவாக்கி இருக்கிறது. இந்த வெப் தொடர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேகமாக மாறிவரும் இந்த டிஜிட்டல் உலகத்தில் பல ஆன்லைன் தளங்கள் மக்களின் வாழ்க்கையை மிக சுலபமாக்கிவிட்டது. குறிப்பாக ஓடிடி தளங்களின் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக பெரும் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா காலகட்டத்திற்கு பின்னர், ஓடிடி தளத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

Uppu puli karam New tamil web series on disney hotstar

ஓடிடி தளங்கள்: குடும்பத்தோடு தியேட்டருக்குச் சென்று 200 ரூபாய் செலவு செய்து ஒரு படம் பார்ப்பதை விட, ஆண்டுக்கு 1,500 ரூபாய் மட்டுமே செலுத்தி ஆயிரக்கணக்கான திரைப்படங்களை ஓடிடி தளம் மூலம் வீட்டிலிலேயே குடும்பத்துடன் பார்ப்பதை பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். சனி, ஞாயிறு வந்துவிட்டால் ஏதாவது ஒரு படம் பார்த்தே ஆக வேண்டும் என்று நினைக்கும் சினிமா ரசிகர்களின் பல்சை புரிந்து கொண்ட ஓடிடி தளங்கள் வாரா வாரம் புது புது படங்களை ஓடிடியில் ஒளிபரப்பி வருகிறது. படங்கள் மட்டுமில்லாமல் வெப் தொடர்களையும் தயாரித்து வருகிறது. அந்த வகையில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் மத்தகம், லேபிள், ஹார்ட் பீட் என பல வெப் தொடர்களை வெளியிட்டன நிலையில் தற்போது, 'உப்பு புளி காரம்' என்ற தொடரை உருவாக்கி உள்ளது.

உப்பு புளி காரம்: இயக்குநர் எம். ரமேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த இணைய தொடரில் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஸ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரீனா, ராஜ் ஐயப்பா உள்ளிட்ட பலர் நடித்தள்ளனர். பார்த்திபன் மற்றும் சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த இணைய தொடருக்கு ஷேக் இசையமைத்திருக்கிறார். டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் என்னும் டிஜிட்டல் தள நிறுவனத்திற்காக இந்த இணைய தொடரை விகடன் டெலி விஸ்டாஸ் எனும் நிறுவனம் தயாரித்துள்ளது.

வித்தியாசமான தொடர்: இத்தொடர் குறித்து பேசிய இயக்குநர். நவீன தலைமுறையினரின் காதல் மற்றும் உறவுகள் பற்றியும், இதன் மேலாண்மையை தற்போதைய இளைய தலைமுறையினர் எவ்வாறு கடைப்பிடிக்கிறார்கள் என்பதையும் , அவர்களின் சமூக பொறுப்புணர்வு குறித்தும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இத்தொடர் உருவாக்கப்பட்டுள்ளது என்றார். இது வழக்கமான தொடராக இல்லாமல் வித்தியாசமாக இருக்கும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X