ரொம்ப கேவலம்.. திறந்திருந்த கார் கண்ணாடி.. அந்த நடிகையை கண்ட இடத்தில் தொட்ட ரசிகர்கள்.. ஷாக்!
மும்பை: சன்னி லியோன் தொகுத்து வழங்கி வரும் எம் டிவி ஸ்பிளிட்ஸ்வில்லா சீசன் 15 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கும் மிஸ்சீஃப் மேக்கராக கலக்கி வரும் பிக் பாஸ் பிரபலம் உர்ஃபி ஜாவேத்தை ரசிகர்கள் கண்ட இடத்தில் தொட்ட வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
உர்ஃபி ஜாவேத் என்றதுமே ரசிகர்களுக்கு தினுசு தினுசாக ஆடை அணிகிறேன் என்கிற பெயரில் கிரிஞ்ச் பண்ணியே பாப்புலரானவர் தானே என எளிதில் கெஸ் செய்து விட முடியும்.

இந்தி பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சீக்கிரமே வெளியேறிய இவர், தற்போது ஓடிடியில் மோஸ்ட் வான்டட் நடிகையாக மாறியுள்ளார். சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் சிக்கிக் கொண்ட உர்ஃபி ஜாவேத் காரில் ஏறிய நிலையிலும், ரசிகர்களால் மோசமான அனுபவத்தை சந்தித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோசமான உடைகள்: இளம் வயதில் ஆபாச நடிகை என்றே தன்னை அடித்து அப்பா வீட்டை விட்டே விரட்டி விட்டார் என அழுது புலம்பிய உர்ஃபி ஜாவேத், வித விதமான உடைகளை அணிந்துக் கொண்டு ஆடைகளை அணியாமல் வாட்ச், பூட்டு, ஸ்டிக்கர், டேப் உள்ளிட்டவற்றை உடைகளாக மாற்றியும் அணிந்துக் கொண்டு தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு சர்ச்சைகளை கிளப்பியே பாப்புலர் ஆகிவிட்டார்.

ஓவர் குடிபோதை: சில நாட்களுக்கு முன்னர் தான் பார்ட்டி ஒன்றில் ஓவர் குடிபோதையில் தள்ளாடியபடியே தனது தோழிகளின் உதவியுடன் காரில் ஏற்றப்படும் வீடியோ வெளியாகி பலரும் உர்ஃபி ஜாவேத்தை கழுவி ஊற்றினர். இந்நிலையில், என்னதான் இருந்தாலும் ஒரு பெண்ணை பப்ளிக்கில் ரசிகர்கள் இப்படி அநாகரிகமாக சீண்டக் கூடாது என நெட்டிசன்கள் கண்டித்து வருகின்றனர்.
கண்ட இடத்தில் தொட்ட ரசிகர்கள்: சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வெளியே வந்து தனது காரில் உர்ஃபி ஜாவேத் ஏறுவதற்கு முன்பே அவரை ரசிகர்கள் சூழ்ந்துக் கொண்டனர். இளைஞர்கள் கூட்டத்திடம் இருந்து தப்பித்து செல்ல தனது காரில் அவசர அவசரமாக உர்ஃபி ஜாவேத் ஏறினார். கார் கண்ணாடி மூடாமல் திறந்து இருந்த நிலையில், சில இளைஞர்கள் உர்ஃபி ஜாவேத்தை கண்டபடி தொட ஆரம்பித்து விட்டனர். உடனடியாக அங்கிருந்த பாடிகார்ட் சிலர் இளைஞர்களின் கைகளை எடுத்து விடும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திட்டும் ரசிகர்கள்: உர்ஃபி ஜாவேத் மோசமாக உடை அணிந்து வந்தாலும், அது அவருடைய சொந்த விருப்பம். ஆனால், இளைஞர்கள் அதற்காக அட்வாண்டேஜ் எடுத்துக் கொண்டு பொதுவெளியில் ஒரு பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக இப்படி மோசமான செயலில் ஈடுபடுவது ரொம்ப அசிங்கம் என ஏகப்பட்ட ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் அந்த இளைஞர்களின் செயலை கண்டித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











