இந்தியாவோட கிம் கர்தாஷியன்.. நடிகைகளின் வாழ்வை தோலுரித்துக் காட்டிய உர்ஃபி ஜாவேத்தின் வெப் சீரிஸ்!
மும்பை: வித விதமான பொருட்களை உடைகளாக மாற்றி ஃபேஷன் உலகத்தில் தனி புரட்சியே பண்ணி பிரபலமாகியுள்ளார் உர்ஃபி ஜாவேத். ஆரம்பத்தில் மீரா மிதுன் அளவுக்கு அவரை ட்ரோல் பண்ணியவர்கள் எல்லாம் தற்போது அவரை ஒரு பாலிவுட் ஸ்டாராகவே பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
வாடகைக்கு கூட வீடு கிடைக்கவில்லை என புலம்பிய உர்ஃபி ஜாவேத்தை வீட்டை விட்டே தந்தை வெளியே அனுப்பிய நிலையில், மும்பைக்கு ஓடி வந்த அவர் தனக்குள் இருக்கும் ஃபேஷன் ஆர்வத்தை வெளிக்கொண்டு வந்து சில வருடங்களில் அமேசான் பிரைமில் ஒரு டாக்குமென்ட்ரி ஷோ வெளியிடும் அளவுக்கு ஆளாகி விட்டது தான் ஆச்சர்யத்தின் உச்சம்.

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியான அவரது Follow Kar Lo Yaar வெப்சீரிஸை பார்த்த ரசிகர்கள் பலரும் சோஷியல் மீடியாவில் அந்த வெப்சீரிஸ் குறித்த விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்தியாவின் கிம் கர்தாஷியன்: ஹாலிவுட் நடிகைகளை தூக்கி சாப்பிடும் அளவுக்கு அமெரிக்க டிவி நடிகை ஒருவர் உலகம் முழுவதும் 360 மில்லியன் ஃபாலோயர்களுடன் சூப்பர் மாடலாக இருக்க முடியும் என்றால் அது கிம் கர்தாஷியன் தான். இந்த ஆண்டு நடைபெற்ற முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு வந்திருந்தாரே அதே கிம் கர்தாஷியன் தான். அவரை போலவே இந்தியாவின் கிம் கர்தாஷியனாக மாறிவிட்டார் உர்ஃபி ஜாவேத் என ரசிகர்கள் உர்ஃபி ஜாவேத்தின் வெப்சீரிஸையும் அவரையும் கொண்டாடி வருகின்றனர்.

பிளாஸ்டிக் சர்ஜரி காட்சிகள்: நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பல நடிகைகள் காஸ்மெடிக் சர்ஜரிக்களை செய்துக் கொண்டு எப்படி அழகிகளாக வலம் வருகின்றனர் என்பதை வெளிச்சம் போட்டு இந்த வெப்சீரிஸில் காட்டி அதிர்ச்சியை கிளப்புகிறார் உர்ஃபி ஜாவேத். தனது தோற்றத்தை மாற்ற BOTOX எனும் காஸ்மெடிக் சர்ஜரியையும் லிப் ஃபில்லர்ஸ், கண்ணுக்கு கீழ் சதையை சேர்க்க ஃபில்லர்ஸ் என ஊசி போட்டு தனது அழகையும் முகத்தையும் எப்படி மெருகேற்றி உள்ளேன் பாருங்கள் என்பதை வெளிப்படையாக காட்டியுள்ளார். சில நடிகைகளுக்கு இதனால் பின் விளைவுகளும் ஏற்படுகின்றன. உர்ஃபி ஜாவேத்துக்கும் தவறான சிகிச்சை மூலம் கண் எல்லாம் ரைசா வில்சனை போல வீங்கி போனதையும் அவர் போட்டோக்களாக வெளியிட்டு இருந்தார்.

ஆபாச உடைகள்: டாப்லெஸ் ஆகவும், பிகினி உடைகளையும் அணிந்துக் கொண்டு நடிகைகள் ஆபாச உடைகளுடன் போஸ் கொடுத்து வரும் நிலையில், அதில் வெரைட்டி காட்டலாம் என நினைத்த உர்ஃபி ஜாவேத் வெறும் டேப் வைத்து தனது முன்னழகை மறைத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட உடையுடன் போஸ் கொடுத்து ஷாக் கொடுத்தார். தனது மார்பு பகுதியில் ஃபேன் போன்ற ஒரு விஷயத்தை ஓட வைத்தும், தனது கவுனுக்குள் சோலார் சிஸ்டத்தையே அடக்கிய படியும் உடைகளை அணிந்து அவர் வெளியிட்ட புகைப்படங்களும் வீடியோக்களும், அவருடைய ஃபேஷன் யுக்தியும் அவரை செலிபிரிட்டி ஆக்கி விட்டது.
கோடிக் கணக்கில் சம்பளம்: சன்னி லியோன் தொகுத்து வழங்கிய ஸ்பிளிட்ஸ்வில்லா சீசன் 15ல் Mischief Maker எனும் குழப்பவாதியாக பங்கேற்ற இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர். படங்களிலும், வெப்சீரிஸ்களிலும் வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், 26 வயதிலேயே கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறாராம் உர்ஃபி ஜாவேத். நடிகைகள் மற்றும் சோஷியல் மீடியா பிரபலங்களின் வாழ்க்கையை அறிய விரும்பும் ரசிகர்கள் தாராளமாக இந்த வெப்சீரிஸை பார்க்கலாம் என ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











