Vadakkupatti Ramasamy OTT: சர்ச்சையை கிளப்பிய சந்தானம்.. வடக்குப்பட்டி ராமசாமி ஓடிடி-யில் ரிலீஸ்
சென்னை : இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
நாயகனாக நடித்த பின் செங்கல்பட்டுவை கடந்து நடிகர் சந்தானம் காமெடி பெரிதாக ரசிகர்களால் கொண்டாடப்படவில்லை. அதனை மாற்றுவதற்காக பேய் படங்கள், பீரியட் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் சந்தானம். அதற்கு உதவியாக அமைந்த படம் தான் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம். நடிகர் சந்தானம், மேகா ஆகாஷ், மாறன், நிகழ்கள் ரவி, தமிழ் மற்றும் லொள்ளு சபா குழு என பலரும் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் பிப்.2ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகியது. கடவுள் நம்பிக்கையே இல்லாத சந்தானம், ஒரு கோயிலை கட்டி அதன் மூலமாக வருமானம் பெற்று சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். திடீரென வடக்குப்பட்டி கிராமத்திற்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வரும் இயக்குநர் தமிழ், கோயிலுக்கு சீல் வைக்கிறார். இதன்பின் மீண்டும் கோயிலை திறக்க நடக்கும் சந்தானத்தின் சேட்டையே படம்.
டிடி ரிட்டர்ன்ஸ் படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் நடிகர் சந்தானம் மற்றவர்களுக்கு இடம் கொடுத்து தேவையான இடங்களில் ஸ்கோர் செய்தார். முதல் பாதியிலும் லொள்ளுசபா மாறனும், சேஷுவும் சந்தானத்துடன் இணைந்து அடித்த லூட்டிகளால் ரசிகர்கள் திரையரங்குகளில் வெடித்து சிரித்தனர். இது போதாதென்று நிழல்கள் ரவி கொடுத்த சேட்டைகள் ரசிகர்களுக்கு எதிர்பார்க்காத ட்ரீட்டாக அமைந்தது.

இந்த திரைப்படம் சந்தானம் சினிமா வாழ்க்கையில் முக்கியமான வெற்றிப் படமாக அமைந்தது. ஏனென்றால் டிடி ரிட்டர்ன்ஸ் படத்திற்கு பின் சந்தானம் நடித்த எந்த படம் பெரியளவில் வெற்றிபெறவில்லை. இந்த நிலையில் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் தமிழ்நாட்டில் தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்தது.
அதுமட்டுமல்லாமல் வடக்குப்பட்டி ராமசாமி படம் வெற்றிப் படமாக அமைந்ததாக செய்தியாளர்களை சந்தித்து சந்தானம் உள்ளிட்ட படக்குழுவினர் நன்றி கூறினர். இந்த நிலையில் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் ஓடிடி ரிலீஸ் எப்போது என்ற கேள்வி எழுந்தது. தற்போது வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











