Gangers on OTT: வடிவேலுவின் மாஸ் கம்பேக் கேங்கர்ஸ்.. ஓடிடியில் ரிலீஸ் ஆகுதுப்பா.. விவரம் இதோ!

சென்னை: சுந்தர் சி இயக்கத்தில் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் வடிவேலு கை கோர்த்த படம் தான் கேங்கர்ஸ். இந்த படம் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படம் வெளியாகி தியேட்டரில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இது மட்டும் இல்லாமல், சுந்தர் சி - வடிவேலு காம்பினேஷனில் படம் ரிலீஸ் ஆனதால் ரசிகர்கள் ஆவலோடு தியேட்டருக்கு படையெடுத்தார்கள். படமும் ரசிகர்களுக்கு திருப்தி கொடுத்தது. இந்நிலையில் படம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிக்கொண்டு உள்ளது.

கேங்கர்ஸ் படத்தில் வடிவேலு மற்றும் சுந்தர் சி உடன், கேத்ரின் தெரசா, வாணி போஜன், வடிவேலு, முனீஷ்காந்த், பக்ஸ் பகவதி பெருமாள், மைம் கோபி, அருள்தாஸ், சந்தானபாரதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சத்யா இசையில் இந்த படம் உருவாகியுள்ளது. படத்திற்கு வெங்கட் ராகவன் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.படம் பார்த்த ரசிகர்கள் படம் குறித்து பாசிட்டிவான கருத்துக்களைத் தெரிவித்தார்கள்.

குறிப்பாக, " படம் மனி ஹைஸ்ட் வெப் சீரிஸை தமிழில் பட்டி டிங்கர் பார்த்து எடுத்து வைத்துள்ளார்கள் என்று கூறினார்கள். மேலும், படத்தில் வடிவேலு பல கெட்டப்புகளில் வருகிறார். குறிப்பாக கிளைமேக்ஸில் மடிசார் அணிந்து கொண்டு பெண் வேடத்தில் வரும் கதாபாத்திரத்திற்கு தியேட்டரில் ரசிகர்கள் வெடித்துச் சிரித்தார்கள் என்று கூறினார்கள். மேலும், முதல் பாதியில் படம் சுமாராக இருந்தாலும் இரண்டாம் பாதியில் அட்டகாசமான காமெடி காட்சிகளை வைத்து ரசிகர்களை திருப்திகரமாக வெளியே அனுப்பியுள்ளார்கள்" என்று தெரிவித்தார்கள்.

Vadivelu And Sundar C Combination Gangers Movie Streaming On Amazon Prime OTT From May 15

ப்ளூ சட்டை மாறன்: அதேபோல் பிரபல சினிமா விமர்சகர், ப்ளூ சட்டை மாறன் இந்த படம் குறித்து தனது விமர்சனத்தில், தியேட்டரே விழுந்து விழுந்து சிரித்தது. ஆனால் எனக்கு கொஞ்சம் கூட சிரிப்பு வரவில்லை. சுந்தர் சி படம் என்றாலே இரண்டு மூன்று கதாநாயகிகளை வைத்து பாடல் காட்சிகள், கிளாமர் காட்சிகள் என வாழ்க்கைக்கு அத்தியாவசியங்களை வைத்து தேத்தி விடுவார். ஆனால் இந்த படத்தில் அது மிஸ்ஸிங் என்று தெரிவித்திருந்தார்.

ஓடிடி தளம்: ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படம் ஓடிடி தளத்தில் எப்போது வெளியாகும் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் தான் வாங்கியுள்ளது என்ற தகவல் முன்னரே தெரிவிக்கப்பட்டது. அப்படி இருக்கும்போது, படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது.

ஸ்ட்ரீமிங்: பொதுவாக ஒரு படம் தியேட்டரில் வெளியாகி நான்கு வாரங்களுக்கு பின்னர் தான் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படும். ஆனால் கேங்கர்ஸ் படம் படம் வெளியாகி மூன்றாவது வாரத்திலேயே ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது. இது ரசிகர்களுக்கு ஒருபுறம் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், திரைத்துறையில் பலருக்கும் கொஞ்சம் ஷாக் கொடுத்துள்ளது. அதாவது, கேங்கர்ஸ் படம் வணிக ரீதியாக தோல்விப்படமா என்ற கேள்வியை எழுப்பி வருகிறார்கள். தற்போது படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் நாளை முதல் அதாவது மே மாதம் 15ஆம் தேதியில் இருந்து, ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

FAQs
கேங்கர்ஸ் படத்திற்கு முன்னர் சுந்தர் சி மற்றும் வடிவேலு இணைந்து நடித்த படம் எது?

நகரம் மறுபக்கம். இந்த படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியானது. 

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X