வலிமை 25வது நாள்... ஓடிடி ரிலீஸ்... 1000 அடி போஸ்டருடன் ரசிகர்கள் கொண்டாட்டம்

சென்னை : நடிகர் அஜித்தின் வலிமை படம் 25வது நாளை கடந்துள்ளது. இதையடுத்து பலவகை போஸ்டர்களுடன் ரசிகர்கள் இந்த கொண்டாட்டத்தை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் 1000 அடி போஸ்டருடன் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நடிகர் அஜித்

நடிகர் அஜித்

நடிகர் அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த மாதம் 24ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான படம் வலிமை. இந்தப் படம் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் வெளியானது. வெளியான இடங்களில் எல்லாம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

25 நாள் கொண்டாட்டம்

25 நாள் கொண்டாட்டம்

கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் படம் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றுள்ளது. ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளான இந்தப் படம் தற்போது 25வது நாளை கடந்துள்ளது. இதுகுறித்து ரசிகர்கள் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து 25வது நாளை குறிப்பிடும் வகையில் போஸ்டர்களை வெளியிட்டு அவர்களது சந்தோஷத்தை பகிர்ந்து வருகின்றனர்.

1000 அடி போஸ்டர்

1000 அடி போஸ்டர்

மேலும் வலிமை படத்தின் 25வது நாளை கொண்டாடும் வகையில் 1000 அடி போஸ்டர் ஒன்றும் அஜித் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் வெளியாகியுள்ளது. 50 பேர் சேர்ந்து அந்த போஸ்டரை நிறுத்தியுள்ளனர். இந்தப் போஸ்டரில் 25வது நாளை எட்டிய வலிமை படத்தின் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜீ5 ஓடிடியில் வெளியீடு

ஜீ5 ஓடிடியில் வெளியீடு

மேலும் படம் வரும் 25ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓடிடியில் வலிமை படம் வெளியாகவுள்ள நிலையில் திரையரங்குகளில் சென்று படத்தை பார்க்க முடியாதவர்கள், இதன்மூலம் வீட்டிலிருந்தபடியே பார்க்க முடியும் என்று அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மகிழ்ச்சி

குடும்பத்தினருடனும் படத்தை பார்க்கும்வகையில் ஓடிடி ரிலீஸ் தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தாங்கள் நினைத்த நேரங்களில் எல்லாம் தங்களது விருப்பத்திற்குரிய ஹீரோவான அஜித்தின் இந்தப் படத்தை பார்க்க முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X