ஓடிடியில் வெளியாகும் வரலக்‌ஷ்மி சரத்குமாரின் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்

தமிழ் ஆஹா ஒரிஜினல் வழங்கும் இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் நடித்திருக்கும் க்ரைம்-த்ரில்லர் படத்திற்கு 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது

கதையம்சம் சார்ந்த நல்ல திரைப்படங்கள் விமர்சகர்கள், சினிமா பார்வையாளர்கள் என அனைத்துத் தரப்பிடமும் நல்ல வரவேற்பைப் பெறும். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் தயாள் பத்மநாபன் படங்களில் சிறந்த பரிமாணங்களைக் கொடுத்துள்ளார். சமீபத்தில் வெளியான 'கொன்றால் பாவம்' திரைப்படம் சினிமா பிரியர்களின் கவனத்தைக் கவர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, தனது அடுத்த இயக்கமாக வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஆரவ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படப்பிடிப்பை இப்போது முடித்துள்ளார். இந்தப் படத்தை தயாள் பத்நாபனே தயாரிக்கவும் செய்கிறார். படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில், தற்போது படத்திற்கு 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' எனத் தலைப்பிட்டுள்ளனர்.

Varalakshmi Sarathkumar’s Maruthi Nagar Police Station to be Released on OTT

இந்த தலைப்பின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் இந்தப் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான தயாள் பத்மநாபன் கூறுகையில், "அடிப்படையில், நான் ஹனுமானின் தீவிரமான பக்தர் மற்றும் அவரது இருப்பை உள்ளடக்கிய சில தலைப்புகளை என்னுடைய படங்களுக்கு வைக்க விரும்பினேன். இந்தப்படம் பல சாதக பாதகங்களைக் கொண்ட காவல் நிலையத்தின் பின்னணியில் நடக்கும் சம்பவங்களைக் கதையாகக் கொண்டது. உண்மையான ஸ்டேஷன் பெயர்கள் மற்றும் பகுதிகளை நாங்கள் இதில் படமாக்க விரும்பவில்லை. அதனால், 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' என்று கற்பனையான பெயரைக் கொண்டு வர முடிவு செய்தோம். தற்போது படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது".

வரலக்ஷ்மி சரத்குமார் & ஆரவ் இருவரும் போலீஸ் அதிகாரிகளாக முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நான்-லீனியர் பாணியில் புதிய பரிமாணத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் சந்தோஷ் பிரதாப், மஹத் ராகவேந்திரா, சுப்ரமணியம் சிவா மற்றும் பல முக்கிய நடிகர்கள் முக்கிய வேடங்களில் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X