OTT: உடம்பெல்லாம் நீல நிற மேக்கப்.. யக்‌ஷினியாக மாறிய வேதிகா.. 18 வருஷமா அப்படியே இருக்காரே!

சென்னை: நடிகை வேதிகா யக்‌ஷினி எனும் ஹாரர் ஃபேண்டஸி வெப்சீரிஸில் நடித்துள்ளார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் அந்த வெப்சீரிஸ் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வெப்சீரிஸில் நடிக்க பயங்கரமாக மேக்கப் எல்லாம் போட்டுக் கொண்டு நடித்துள்ள வேதிகா அதன் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா, நிவேதா பெத்துராஜ், ஹன்சிகா என பல முன்னணி நடிகைகள் சினிமாவை தாண்டி ஓடிடி வெப்சீரிஸிலும் நடித்து அசத்தி வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை வேதிகாவும் தற்போது ஓடிடி பக்கம் ஒதுங்கியுள்ளார்.

OTT Vedhika web series

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி உள்ள இந்த வெப்சீரிஸில் ராகுல் விஜய், வேதிகா, லக்‌ஷ்மி மஞ்சு, அஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேஜா மர்னி என்பவர் இந்த வெப்சீரிஸை இயக்கியுள்ளார்.

யக்‌ஷினி கதை: டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ள யக்‌ஷினி வெப்சீரிஸில் வேதிகா லீடு ரோலில் நடித்துள்ளார். குபேரனிடம் சாபம் வாங்கும் மாயா எனும் யக்‌ஷினி அந்த சாபத்தில் இருந்து விமோச்சனம் அடைய வேண்டும் என்றால் 100 ஆண்களுடன் உடலுறவு கொண்டு பின்னர் அவர்களை கொலை செய்ய வேண்டும். 99 பேரை அப்படி ஒன்றாக பழகி போட்டுத் தள்ளும் வேதிகா கடைசியாக 100வது ஆளாக ஹீரோவை சந்திக்கும் நிலையில், உண்மையாகவே அவர் மீது காதல் கொள்கிறார். அதன் பின்னர் என்ன ஆனது என்பது தான் இந்த யக்‌ஷினி வெப்சீரிஸின் கதை.

OTT Vedhika web series

முனி, காஞ்சனா 3: ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி படத்தில் ஹீரோயினாக நடித்த வேதிகா கடைசியாக காஞ்சனா 3 படத்தில் ஓவியா மற்றும் நிக்கி டம்போலி உடன் இணைந்து நடித்திருப்பார். காஞ்சனா சீரிஸில் இருந்து வெளியே வந்து தற்போது யக்‌ஷினி எனும் ஹாரர் வெப்சீரிஸில் நடித்துள்ளார்.

மேக்கப் போடும் வீடியோ: அவதார் படத்தில் வருவது போல உடல் முழுவதும் நீல நிற மேக்கப்பை போட்டுக் கொண்டு நடிகை வேதிகா தயாராகும் பிடிஎஸ் வீடியோவை தற்போது தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். இந்த மேக்கப் போட 3 மணி நேரம் ஆகுமாம். அதன் பின்னர் அந்த மேக்கப்பை நீக்க 2 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் எனக் கூறியுள்ளார். அர்ஜுன் நடித்த மதராசி படத்தில் அறிமுகமான வேதிகா சுமார் 18 ஆண்டுகள் சினிமாவில் நடித்தும் இன்னமும் தனது உடல் அமைப்பை அதே போலவே மெயின்டெயின் செய்து வருகிறார். முனி, சக்கரக்கட்டி, காளை, பரதேசி, காவியத் தலைவன், காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், இந்த ஆண்டு தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X