யப்பா செம த்ரில்லர்.. வேதிகாவின் பேயாட்டம்.. Fear எந்த ஓடிடியில் ஸ்ட்ரீமாகுது தெரியுமா?

சென்னை: கோலிவுட்டில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் வேதிகா.அர்ஜுன், லாரன்ஸ், சிம்பு உள்ளிட்டோருடன் நடித்த அவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அப்படி இருந்தும் சில படங்களில் நடித்த அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இப்போது நடித்துவருகிறார். இந்தச் சூழலில் அவர் நடித்த Fear என்ற தெலுங்கு திரைப்படம் கடந்த வருடம் திரையரங்குகளில் வெளியானது. தற்போது ஓடிடியில் ஸ்ட்ரீமாக ஆரம்பித்திருக்கிறது.

மும்பையில் பிறந்து வளர்ந்தவர் வேதிகா. அவர் வளரும் சமயத்தில் அவருக்கு மாடலிங் மீது ஆசை ஏற்பட்டதன் காரணமாக சில விளம்பர படங்களில் நடித்தார். அதனையடுத்து நடிகரும் இயக்குநருமான ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் வேதிகாவை மதராஸி படத்தின் மூலம் சினிமாவுக்கு அழைத்து வந்தார். ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. அதனையடுத்து ராகவா லாரன்ஸ் இயக்கிய முனி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். 2007ஆம் ஆண்டு வெளியான படம் அவருக்கு ஓரளவுக்கு அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது.

vedhika fear ott

தொடர்ந்து வாய்ப்புகள்: முனி படத்துக்கு பிறகு தெலுங்குக்கு சென்று நடித்தார். அதனையடுத்து தமிழில் சிம்புவுடன் காளை, சாந்தனு அறிமுகமான சக்கரக்கட்டி படங்களில் நடித்த அவர் கன்னடத்திலும் கால் பதித்தார். திரையுலகில் அறிமுகமான சில காலத்திலேயே தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து தனது திறமையை நிரூபித்தார் அவர். தொடர்ந்து தமிழிலும்,தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்புகள் வரத்தான் செய்தன.ஆனால் அவர் எதிர்பார்த்த வெற்றி அவருக்கு கிடைக்கவில்லை.

பரதேசி அங்கம்மா: இப்படிப்பட்ட சூழலில்தான் இயக்குநர் பாலா இயக்கத்தில் அதர்வா ஹீரோவாக நடித்த பரதேசி திரைப்படத்தில் அங்கம்மா என்ற ரோலை ஏற்று ஹீரோயினாக நடித்தார். பாலாவின் இயக்கம் என்றாலே நடிக்க தெரியாதவர்களும் நடித்துவிடுவார்கள். வேதிகாவுக்கு ஏற்கனவே திறமை இருந்ததால் இந்தப் படத்தில் அவரது திறமை முழுதாக வெளிப்பட்டது. இந்தப் படத்துக்கு பிறகு தமிழில் பெரிய ரவுண்டு வரலாம் என்று கணித்திருந்த அவருக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. சரளமாக அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஹிந்தியில் வேதிகா: பரதேசிக்கு பிறகு அவருக்கு தமிழில் சொல்லிக்கொள்ளும்படியான படம் என்றால் அது வசந்தபாலன் இயக்கிய காவியத் தலைவன் படம்தான். அதற்கு பிறகு காஞ்சனா 3 படத்தில் நடித்தார். இதற்கிடையே அவர் மலையாளம் மற்றும் ஹிந்தியிலும் அறிமுகமானார். ஹிந்தியில் அவர் கொஞ்சம் ஓவர் கிளாமர் காட்டி நடித்தார். இருந்தாலும் அங்கும் அவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் வரிசையாக கிடைக்கவில்லை. சூழல் இப்படி இருக்க கடந்த வருடம் அவரது நடிப்பில் Fear திரைப்படம் வெளியானது.

அமேசானில் ஸ்ட்ரீமிங்: பேய் பட ஜானரில் ஹரிதா கோகினேனி இயக்கியிருந்த இந்தப் படத்தில் வேதிகாதான் லீட் ரோல் ஏற்றிருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீஸாகி ஓரளவுக்கு நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது. இந்நிலையில் இந்தப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இன்று முதல் ஸ்ட்ரீமாக ஆரம்பித்திருக்கிறது. தியேட்டர்களில் கிடைத்த ரெஸ்பான்ஸைவிடவும் ஓடிடியில் அதிக ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்று படக்குழு நம்பியிருக்கிறது. அமேசானில் ஸ்ட்ரீமாவதை வேதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X