வெங்கடேஷ் -மீனா நடிப்பில் த்ரிஷ்யம் 2 படம்... ஓடிடியில் ரிலீஸ்

ஐதராபாத் : நடிகர் வெங்கடேஷ், மீனா நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ளது த்ரிஷ்யம் 2.

கடந்த மார்ச் மாதத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ள நிலையில் தற்போது படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

இந்நிலையில் இந்தப்படம் வரும் 25ம் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

த்ரிஷ்யம் படம்

த்ரிஷ்யம் படம்

நடிகர் மோகன்லால், மீனா நடிப்பில் மலையாளத்தில் உருவான படம் த்ரிஷ்யம். இந்தப் படம் மிகச்சிறப்பான வெற்றியை பெற்ற நிலையில் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு அனைத்து இடங்களிலும் சிறப்பான வரவேற்பை பெற்றது.

த்ரிஷ்யம் 2 படம்

த்ரிஷ்யம் 2 படம்

இந்நிலையில் மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் த்ரிஷ்யம் 2 படத்தை இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். இந்தப் படம் கடந்த பிப்ரவரி மாதத்தில் அமேசான் ப்ரைமில் வெளியானது. இந்தப் படமும் சிறப்பான வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்ற நிலையில் தொடர்ந்து தெலுங்கில் இதன் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் த்ரிஷ்யம் 2

தெலுங்கில் த்ரிஷ்யம் 2

வெங்கடேஷ், மீனா நடிப்பில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் ஜீத்து ஜோசப். இந்தப் படத்தின் சூட்டிங், போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் நிறைவுற்று தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் படம் வரும் 25ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுப்ரியா இயக்கம்

சுப்ரியா இயக்கம்

த்ரிஷ்யம் படத்தின் தெலுங்கு பதிப்பு கடந்த 2013ல் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. படத்தில் வெங்கடேஷ், மீனா, நதியா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். படத்தை டோலிவுட் இயக்குநர் சுப்ரியா இயக்கியிருந்தார். தமிழில் பாபநாசம் படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார்.

2ம் பாகத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்

2ம் பாகத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்

இந்நிலையில் தற்போது த்ரிஷ்யம் 2 படத்தின் தெலுங்கு ரீமேக்கை ஜீத்து ஜோசப்பே இயக்கியுள்ளார். கடந்த மார்ச் மாதத்தில் இதன் படப்பிடிப்பு துவங்கப்பட்டு ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்ஜெட்டில் இந்தப் படம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.

சிறப்பான 2ம் பாகம்

சிறப்பான 2ம் பாகம்

மலையாளத்தில் த்ரிஷ்யம் 2 படம் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. போலீஸ் ஸ்டேஷனில் புதைக்கப்படும் பிணத்தை ஒருவர் பார்ப்பதாக இதன் கதை துவங்கும். அந்த இக்கட்டிலிருந்து தனது குடும்பத்தை நாயகன் காப்பதாக கதை நகரும். இதே கதையை தற்போது தெலுங்கிலும் எடுத்து முடித்துள்ளார் ஜீத்து ஜோசப்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X