ஓடிடி நிறுவனங்களின் ஓவர் கண்டிஷன்.. கொந்தளித்த வெற்றிமாறன், பா. ரஞ்சித்.. என்ன சொன்னார்கள் தெரியுமா?

சென்னை: ஹாலிவுட் ரிப்போர்ட்டர் ரவுண்ட் டேபிள் கான்ஃபிரன்ஸ் நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான வெற்றிமாறன் மற்றும் பா. ரஞ்சித் பங்கேற்று பேசிய வீடியோ ஒன்று தீயாக இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் உள்ளிட்டோரும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

ஓடிடி நிறுவனங்கள் தரும் வருமானத்தை நம்பியே சமீப காலமாக பல படங்கள் வெளியாகி வருகின்றன. ஓடிடி ரைட்ஸ் விற்றால் தான் படத்தை தியேட்டரிலேயே வெளியிடும் நிலைமைக்கு படக்குழுவினர் வந்து விட்டனர்.

ott vetrimaaran pa ranjith

ஆனால், ஓடிடி நிறுவனங்கள் இந்த ஆண்டு ஏகப்பட்ட கண்டிஷன்களை போடுவதாக வெற்றிமாறன் மற்றும் பா. ரஞ்சித் தங்களின் மனக் குறைகளை கொட்டித் தீர்த்துள்ளனர். மேலும், ஓடிடியை தாண்டி மீண்டும் தியேட்டர் பிசினஸை மீட்டுக் கொண்டு வர என்ன செய்ய முடியும் என்கிற ஐடியாவையும் வெற்றிமாறன் கொடுத்திருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஓவர் கண்டிஷன்: ஓடிடி நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் சினிமா துறைக்கு பணம் கொடுத்து படங்களை வாங்க முன் வந்த நிலையில், பலரும் ஓடிடி நிறுவனங்களை நம்பி படம் எடுக்க ஆரம்பித்தனர். ஆனால், தற்போது நிலைமை அப்படியே தலை கீழாக மாறி வருகின்றன. ஓடிடி நிறுவனங்கள் இப்படித்தான் படம் எடுக்க வேண்டும் என்றும் அந்த மதத்தினருக்கு அது பிடிக்காது, இந்த மதத்தினருக்கு இது பிடிக்காது, இதுபோன்ற காட்சிகளை வைக்கக் கூடாது என ஏகப்பட்ட தடைகளை விதித்து வருகின்றனர். இதனால், படைப்பு சுதந்திரம் என்பது முற்றிலும் ஓடிடி நிறுவனங்களின் கைகளில் சிக்கிக் கொண்டு நசுங்கி வருவதாக வெற்றிமாறன் கூறியுள்ளார்.

ott vetrimaaran pa ranjith

தியேட்டர் பிசினஸை மீட்க வேண்டும்: இயக்குநர் வெற்றிமாறனின் பேச்சை இயக்குநர் பா. ரஞ்சித்தும் ஆதரித்துள்ளார். இந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட வேண்டும் என்றால் மீண்டும் தியேட்டர் பிசினஸை மீட்க வேண்டும் என்கிற ஐடியா கொடுத்த வெற்றிமாறன் நடிகர்கள் முதல் இயக்குநர்கள் என பலரும் தங்களின் சம்பளத்தில் இருந்து 30 முதல் 40 சதவீதம் வரை குறைத்துக் கொண்டு பட்ஜெட்டுக்குள் படமெடுத்தால் தியேட்டருக்கு வந்து பார்க்கும் ஆடியன்ஸ் பணமே லாபத்தைக் கொடுக்கும் விதமாக அமையும் எனக் கூறியுள்ளார்.

சாத்தியப்படுமா?: நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் தங்களின் சம்பளத்தை 40 சதவீதம் வரை குறைத்துக் கொண்டு நடிக்க இனிமேலும் முன் வருவார்களா? வெற்றிமாறன் சொல்வது போல குறைத்துக் கொள்ள சிலர் மட்டுமே வேண்டுமானால் முன் வரலாம் என்றும் பெரிய நடிகர்கள் எல்லாம் சம்பளத்தை குறைத்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் கூறுகின்றனர். வெற்றிமாறனே பட்ஜெட்டுக்குள் படம் எடுக்க மாட்டார் என்றும் விடுதலை படத்திற்கு முதலில் நிர்ணயம் செய்யப்பட்ட பட்ஜெட் மற்றும் அந்த படத்திற்கு இறுதியில் ஆன பட்ஜெட் என்ன என்பது அவருக்கே தெரியுமே என்றும் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X