விடுதலை ஓடிடி...கூடுதலாக 20 நிமிட காட்சி... வெற்றிமாறன் போட்ட மாஸ்டர் பிளான்!

சென்னை : ஓடிடியில் வெளியாக உள்ள விடுதலை படத்தில் கூடுதலாக 20 நிமிட காட்சிகளை சேர்க்க வெற்றிமாறன் பிளான் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாக திரைப்படம் விடுதலை.

Vetrimaaran plans to add an additional 20 minutes of footage to the Viduthalai OTT release

இப்படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் 31ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

சூரி ஹீரோவாக : விடுதலை படம் வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் ஹீரோவாக போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்துள்ள சூரிக்கும், மக்கள் போராளியாக, பெருமாள் வாத்தியார் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்திற்கும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.

குவியும் பாராட்டு : பழங்குடியின பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகளை சமரசமின்றி திரையில் காட்டிய இயக்குநர் வெற்றிமாறன் துணிச்சலை சீமான், திருமாவளவன் போன்ற அரசியல் பிரமுகர்களும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைத்துறையினரும் இப்படத்தை பாராட்டினர். மேலும், முதல் பாகத்தில் விஜய்சேதுபதி செய்து செய்யப்பட்டுள்ளதால், இரண்டாம் பாகத்தில் என்ன நடக்கும் என தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கின்றனர்.

வெற்றிமாறனின் பிளான் : இந்நிலையில். விடுதலை படத்தின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை ZEE 5 ஓடிடி தளம் வாங்கி உள்ளதால் வரும் ஏப்ரல் 29ந் தேதி இப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. ஒடிடியில் வெளியாக உள்ள விடுதலை படத்தின் முதல் பாகத்தில் நேரம் கருதி நீக்கப்பட்ட காட்சிகளை, ஓடிடியில் வெளியாக உள்ள படத்தில் சேர்த்து வெளியிட வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த காட்சி சுமார் 20 நிமிடத்திற்கு மேல் இருக்கும் என்ற கூறப்படுகிறது.

இரண்டாம் பாகம் தாமதமாகும் : நான்கு கோடியில் தொடங்கப்பட்ட விடுதலை படம் 40 கோடி சென்று விட்டது, தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கு எந்த கஷ்டமும் வந்துவிடக்கூடாது என்பதால் தான் விடுதலை படம் இரண்டுபாகமாக வெளிவர காரணம் என்று சொல்லப்படுகிறது. டிசம்பர் மாதமே இரண்டாம் வெளியாகும் என சொல்லப்பட்டு வந்த நிலையில், இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதால், விடுதலை இரண்டாம் பாகம் வெளியாக தாமதமாகும் என்று செல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X