கத்திரிப்போட்டு தூக்கப்பட்ட 30 நிமிட காட்சி.. டைரக்டர் கட்.. ஓடிடியில் வெளியாகும் விடுதலை 2!
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு தியேட்டரில் 'விடுத்தலை 2' திரைப்படம் வெளியானது. அதில் விஜய்சேதுபதி, சூரி, சேத்தன், கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன் என பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையானி இளையராஜா இசையமைத்து இருந்தார். இப்படத்தை திரைப்பிரபலங்கள் முதல் அரசியல் கட்சித் தலைவர்கள் வரை அனைவரும் பாராட்டினார்கள். இந்நிலையில் 'விடுதலை 2' படம் ஓடிடியில் டைரக்டர் கட்டாக வெளியாகி உள்ளது.
காமெடி நடிகர் சூரி, ஹீரோவாக நடித்த விடுதலை முதல் பாகம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து, கடந்த ஆண்டு விடுதலை இரண்டாம் பாகம் வெளியானது. விடுதலை படத்திற்காக இரண்டுகளுக்கும் மேலாக படப்பிடிப்பு நடத்தப்பட்டன. இப்படம் முதலில் ஒரு பாகமாகத்தான் எடுக்கப்பட்டது. ஆனால், படத்தில் இன்னும் சில விஷயத்தை சொல்லவேண்டி இருந்ததால், படம் இரண்டு பாகமாக வெளியிடப்பட்டது. முதல் பாகத்தில் யார் இந்த பெருமாள் வாத்தியார் என்கிற கேள்விக்கு இருந்தது. அந்த கேள்விக்கு விடை சொல்லும் விதமாக, விடுதலை பார்ட் 2வில் பெருமாள் வாத்தியாரின் இளவயது, வாழ்க்கை, காதல் உள்ளிட்டவற்றை பற்றி கூறும் விதமாக கதைக்களத்தை அமைத்திருந்தார் வெற்றிமாறன். இதுவரை, வெற்றிமாறன் படத்தில் இல்லாத அளவிற்கான அழுத்தமான அரசியல் இப்படத்தில் பேசப்பட்டு இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் பயணம், இடதுசாரி இயக்கங்கள் முன்னெடுத்த போராட்டங்கள் என பல இப்படத்தில் பேசப்பட்டு இருந்தது.

டைரக்டர் கட்: வழக்கமாக வெற்றிமாறன் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு 'விடுதலை இரண்டாம் பாகத்திற்கும் கிடைத்தது. இப்படம் பொங்கலை பண்டிகையை முன்னிட்டு அமேசான், ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில், 'விடுதலை 2' திரையரங்கில் 2 மணி நேரம் 46 நிமிடங்கள் வெளியான நிலையில், மேலும் சில காட்சிகள் சேர்க்கப்பட்டு 3 மணி நேரம் 7 நிமிடங்கள் கொண்ட படமாக அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது. வெற்றிமாறன், அளித்த பேட்டி ஒன்றில், ஓடிடியில் 'விடுதலை பார்ட் 2' படம் கூடுதலாக ஒருமணி நேர காட்சிகள் இருக்கும் என தெரிவித்திருந்தார். இவர் ஏற்கனவே கூறியிருந்தது போல, ஓடிடி தளத்தில் அன்கட் வெர்ஷன் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











