Vettaiyan OTT: ஓடிடியில் வேட்டையன் எப்போ ரிலீஸ் தெரியுமா?.. அமேசான் இத்தனை கோடிக்கு வாங்கியிருக்கா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் திரையங்குகளில் தசரா விடுமுறையில் வசூல் தாண்டவம் ஆடியுள்ளது. விஜய்யின் கோட் படம் அளவுக்கு பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்யவில்லை என்றாலும் அந்த படத்திற்கு அடுத்து இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே பெரிய வசூல் இந்த படம் தான்.
தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களுக்கு மேல் மழை அடி வெளுத்து வாங்கி வரும் நிலையில், கேரளா மற்றும் ஆந்திராவில் வேட்டையன் வசூல் வேட்டை ஆடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கோட் படத்தை விட வேட்டையன் படம் கேரளாவில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இந்நிலையில், வேட்டையன் படத்தை பெரிய தொகை கொடுத்து அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கியுள்ள நிலையில், 4 வாரத்தில் ஓடிடியில் வேட்டையன் படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நல்ல படம்: ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியான படங்களிலேயே கமர்ஷியல் மற்றும் கருத்து என கலந்துக் கட்டி மக்களுக்கான படமாக வேட்டையன் உருவாகியுள்ளது. ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரசிகர்களையும் பொது மக்களையும் திருப்திப்படுத்த ரொம்பவே போராடி அதனை செய்தும் காட்டியுள்ளார்.
வேட்டையன் கதை என்ன?: டீச்சர் சரண்யாவாக நடித்துள்ள துஷாரா விஜயனை கொடூரமாக பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளியை சென்னையில் உள்ள போலீஸார் தேடி பிடித்து கைது செய்து என்கவுன்ட்டர் செய்ய திட்டமிடுகின்றனர். ஆனால், குற்றவாளி என பிடிக்கப்பட்ட குணா தப்பித்து விட அவனை குறி வைத்து பிடித்து என்கவுன்ட்டர் செய்கிறார் ஹண்ட்டர் அதியன். சத்யதேவாக வரும் அமிதாப் பச்சன் ரஜினிகாந்த் என்கவுன்ட்டர் செய்தது ஒரு அப்பாவியை எனக் கூற உண்மையான குற்றவாளியை வேட்டையன் தேடிப் பிடித்து வேட்டையாடுவது தான் கதை.
அதிக தொகைக்கு வாங்கிய அமேசான்: விஜய் படங்களை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெரும் தொகை கொடுத்து வாங்கி வரும் நிலையில், ரஜினிகாந்த் படங்களை அமேசான் நிறுவனம் வாங்கி வருகிறது. ஜெயிலர் படத்தை கடந்த ஆண்டு வாங்கி வெளியிட்ட அமேசான் பிரைம் அந்த படத்தின் மூலம் மிகப்பெரிய லாபத்தை ஈட்டியது. அதன் காரணமாக இந்த ஆண்டு வெளியான வேட்டையன் படத்தை 90 கோடி ரூபாய் கொடுத்து அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கியுள்ளது.
ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது?: அமேசான் பிரைம் ஓடிடியில் வேட்டையன் திரைப்படம் 4 வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் நவம்பர் 8ம் தேதி வெள்ளிக்கிழமை வேட்டையன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











