விஜய் சேதுபதியின் முகிழ் படம்... ஓடிடியில் ரிலீஸ்... மக்கள் செல்வன் அறிவிப்பு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மகள் நடிப்பில் உருவான படம் முகிழ்.

செல்லப் பிராணி மீதான மகளின் அச்சம் களைந்து துயர்துடைக்கும் பெற்றோரை மையமாக வைத்து இந்தப்படம் வெளியானது.

தற்போது இந்தப் படம் ஓடிடியில் ரிலீசாகியுள்ளது. இதை தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

முகிழ் படம்

முகிழ் படம்

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மகள், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டவர்களின் நடிப்பில் வெளியான படம் முகிழ். செல்லப் பிராணி மீதான மகளின் அச்சம் களைந்து துயரம் துடைக்க பாடுபடும் பெற்றோரை மையமாக வைத்து இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானது.

ஸ்ரீஜா விஜய் சேதுபதி அறிமுகம்

ஸ்ரீஜா விஜய் சேதுபதி அறிமுகம்

விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா விஜய் சேதுபதி இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். அவருக்கு இந்தப் படத்தில் நடிப்பை வெளிப்படுத்தி நடிக்கும் சிறப்பான கேரக்டர் காணப்பட்டது. ஆயினும் முதல் படம் என்பதாலோ என்னவோ முகபாவனைகள் அனைத்திலும் ஒரே மாதிரி நடித்திருக்கிறார்.

மகளின் அச்சம்

மகளின் அச்சம்

நாய் என்றாலே பயந்து ஓடும் தன்னுடைய மகளின் அச்சத்தை போக்க ஒரு நாய்க்குட்டியை வாங்கி வருகிறார் விஜய் சேதுபதி. விரைவில் அதனுடன் ஒட்டிக் கொள்கிறார் ஸ்ரீஜா. ஒரு எதிர்பாராத சம்பவத்தில் அந்த நாய்க்குட்டியை இழக்கும் சந்தர்ப்பம் ஏற்படுவதும் அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்களும் என படம் செல்கிறது.

ஸ்கோர் செய்யும் ரெஜினா

ஸ்கோர் செய்யும் ரெஜினா

விஜய் சேதுபதி, ரெஜினா, ஸ்ரீஜா மற்றும் அயர்ன் கடைக்காரர் மருதுபாண்டியன் என நால்வரை மட்டுமே பிரதான கதாபாத்திரங்களாக கொண்டுள்ளது படம். விஜய் சேதுபதி வழக்கம் போல சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். மகள் மீதான பாசம், மகளை மன அழுத்தத்தில் இருந்து மீட்க நினைக்கும் தாயாக ஸ்கோர் செய்கிறார் ரெஜினா.

இயக்குநர் கார்த்திக் சுவாமிநாதன்

இயக்குநர் கார்த்திக் சுவாமிநாதன்

அவரது கேரக்டர் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அதை அழகாக பயன்படுத்தியுள்ளார். இயக்குநர் கார்த்திக் சுவாமிநாதன் சிறப்பான கதைக்களத்தை கொண்டிருந்தாலும் இன்னும் சிறப்பாக திரைக்கதையை கொண்டு சென்றிருக்கலாம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

பெண் இசையமைப்பாளர் ரேவா

படத்தின் பெண் இசையமைப்பாளர் ரேவா சிறப்பான இசையை அளித்துள்ளார். ஒளிப்பதிவாளர் சத்யாவும் கவனம் ஈர்க்கிறார். இந்நிலையில் இந்தப் படம் நேற்று முதல் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதை தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் போஸ்டருடன் அறிவித்துள்ளார் விஜய் சேதுபதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X