புருஷனை அடிக்கிற ட்ரிக் நல்லா இருக்கே.. விக்னேஷ் சிவனை பட்டென அடித்த நயன்தாரா.. என்னம்மா இது?

சென்னை: நடிகை நயன்தாராவின் Nayanthara : beyond the fairy tale ஆவணப்படம் வரும் 18ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவின் திருமணம் கடந்த 2022 ஜூலை 9ம் தேதி மிகப் பிரமாண்டமாக மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நடந்தது. இந்த திருமணம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக முன்னதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து நயன்தாராவின் இந்த திருமணம் உள்ளிட்ட பல நிகழ்வுகளின் ஆவணப்படம் வரும் 18ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

nayanthara vignesh shivan netflix


நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா 20 ஆண்டுகளை கடந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களில் அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டில் தன்னுடைய நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். மிகவும் பிரம்மாண்டமான வகையில் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் இந்த திருமணம் நடைபெற்றது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த திருமணத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் காஸ்ட்யூம் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது.

நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம்: நயன்தாராவின் திருமண புடவை ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தது, பல ரீல்ஸ்களுக்கும் நயன்தாராவின் இந்த காஸ்டியூம் பின்னர் பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்த திருமணத்தை ஓடிடியில் நயன்தாரா வெளியிட உள்ளதாக அப்போது தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து நயன்தாராவின் திருமணம் குறித்த இந்த ஆவணப்படம் நெட்ஃபிளிக்சில் வரும் 18ம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கான ட்ரெயிலரை தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளம் வெளியிட்டுள்ளது. இதில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியுடன் நயன்தாரா காட்டப்பட்டுள்ளார்.

நயன்தாரா ஆவணப்பட ட்ரெயிலர்: மேலும் நயன்தாரா குறித்து ராதிகா, நாகார்ஜுனா, அட்லி உள்ளிட்டவர்ககளும் பாராட்டி பேசுவதை இந்த ட்ரெயிலரில் காண முடிகிறது. இதில் நயன்தாரா குறித்து அவரது அழகு குறித்து விக்னேஷ் சிவன் தன்னுடைய உற்சாகத்தை பதிவு செய்கிறார். தொடர்ந்து அது போன்ற திருமணத்தை தான் இதுவரை பார்த்ததில்லை என்று கூறும் விக்னேஷ் சிவன், அந்த அளவிற்கு பிரமாண்டமான திருமணம் தனக்கே நடந்தது குறித்து தன்னுடைய உற்சாகத்தை மேலும் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இந்த ட்ரெய்லரில் நடிகை நயன்தாராவும் விக்னேஷ் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதாக காட்டப்படுகிறது.


விக்னேஷ் சிவனை அடித்த நயன்தாரா: அப்போது விக்னேஷ் சிவனின் பின்னங்கழுத்தில் பளார் என்று ஒரு அறை விடுகிறார் நயன்தாரா. தொடர்ந்து கொசுவை அடித்ததாக அவர் கூற, தங்களது வீட்டில் சுற்றிலும் கொசுவலை இருப்பதாகவும் கொசு உள்ளே வருவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் கூறும் விக்னேஷ் சிவன், தன்னை அடிப்பதற்கு இது ஒரு புது டெக்னிக் என்று அப்பாவித்தனமாக கூறுவதாகவும் இந்த ட்ரெய்லரில் காட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து விக்னேஷ் சிவனை தவிர இந்த உலகத்தில் யாரும் தன்னை அவ்வளவு அக்கறையுடன் பார்த்துக் கொள்ள முடியாது என்று நயன்தாராவும் நெகிழ்ச்சியாக பேசுவதையும் இந்த ட்ரெய்லர் காட்சிப்படுத்தியுள்ளது.


நெட்ஃபிளிக்சில் வெளியீடு: வரும் 18ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நயன்தாராவின் இந்த ஆவணப்படம் வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் நயன்தாராவின் திருமணத்தை மட்டுமில்லாமல் அவரது அடுத்தடுத்த பல விஷயங்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் என்றும் அவரது வெற்றி பயணத்தை மீண்டும் நினைவுபடுத்தும் என்றும் எதிர்பார்க்கலாம். அதெயொட்டியே தற்போது வெளியாகியுள்ள ட்ரெயிலரும் அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X