தியேட்டர்ல பாக்காதவங்க ஓடிடியில பாருங்க... விஜய் ஆன்டனி வேண்டுகோள்!
சென்னை : நடிகர் விஜய் ஆன்டனி, ஆத்மிகா உள்ளிட்டவர்களின் நடிப்பில் வெளியான படம் கோடியில் ஒருவன்.
இந்தப் படத்தை ஆனந்த கிருஷ்ணன் இயக்கியிருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்திலும் இந்தப்படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் ஆன்டனி
நடிகர் விஜய் ஆன்டனி தமிழில் பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி, பிச்சைக்காரன் 2 என இவரது அடுத்தடுத்த படங்களின் பட்டியல் நீளுகிறது. இந்நிலையில் கடந்த மாதத்தில் இவரது நடிப்பில் வெளியானது கோடியில் ஒருவன்.

கோடியில் ஒருவன் படம்
விஜய் ஆன்டனி நடிப்பு மற்றும் இசையமைப்பில் உருவான படம் கோடியில் ஒருவன். ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகி வரவேற்பை பெற்றது. கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் திறக்கப்பட்டதையடுத்து இந்தப் படம் ரிலீசானது.

திரையரங்குகளில் ரிலீஸ்
கடந்த செப்டம்பர் 17ம் தேதியன்று இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசானது. படத்தில் ஆத்மிகா விஜய் ஆன்டனிக்கு ஜோடியாகியிருந்தார். கேஜிஎப் வில்லன் கருடன் ராமசந்திர ராஜூ வில்லனாக நடித்திருந்தார். கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகி நல்ல வசூலை பெற்றுத்தந்தது.

ஆனந்த கிருஷ்ணன் இயக்கம்
மெட்ரோ படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இந்தப் படத்தை இயக்கியிருந்த நிலையில் நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில் பாடல்களும் பின்னணியும் கவனம் பெற்றன. இன்ஃபினிட்டி பிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. முன்னதாக படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி வரவேற்பை பெற்றது.

அமேசான் ப்ரைமில் வெளியீடு
இந்நிலையில் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவிலும் இந்தப் படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. கடந்த 25ம் தேதி இந்தப் படம் அமேசானில் வெளியானது. இந்நிலையில் இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்க்க முடியாதவர்கள் இதில் பார்க்க வேண்டும் என்று விஜய் ஆன்டனி கோரிக்கை விடுத்துள்ளார். இந்தப் படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறப்பான வெற்றி
கொரோனா பாதித்த சூழலில் திரையரங்குகள் திறக்கப்பட்டிருந்தாலும் ரசிகர்கள் வருவார்களா என்ற சந்தேகம் இருந்தது. அந்த நேரத்தில் துணிந்து இந்தப் படத்தை திரையரங்குகளில் வெளியிட்டு படக்குழு சிறப்பான வெற்றியையும் வசூலையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











