Pookie OTT: காதலர்கள் கொண்டாடிய.. ‘பூக்கி‘ படத்தின் ஓடிடி ரிலிஸ் தேதி அறிவிப்பு!
சென்னை: கணேஷ் சந்திரா இயக்கத்தில் அஜய் திஷான், தனுஷா நடிப்பில், விஜய் ஆண்டனியின் இசையில் கடந்த மாதம் காதலர் தினத்தன்று பூக்கி திரைப்படம் தியேட்டரில் வெளியானது. கலவையான விமர்சனத்தை பெற்ற இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
மார்கன் படத்தின் மூலம் அறிமுகமான விஜய் ஆண்டனியின் மருமகன் அஜய் திஷன் இந்த படத்தில் லீட்ரோலில் நடித்துள்ளார். ரொமான்ஸ் மற்றும் காமெடி ஜானரில் உருவான இப்படத்தை அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கி உள்ளார். இதில் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிக் பாஸ் சத்யா, அஷ்வின் ராம், ஷியாரா ஷார்மி, பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பூக்கி படத்தின் கதை: காதலர்களான அஜய் திஷனும், தனுஷாவும் ஒரு நாள் காரில் சென்று கொண்டு இருக்கும் போது இருவருக்கும் இடையே சின்ன வாக்குவாதம் ஏற்படுகிறது. அந்த வாக்கு வாதம் சண்டையாக மாறி இருவரும் மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டு இருக்க, கார் சிக்னலில் நிற்கும்போது, மற்றொரு கார் வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிடுகிறது. இதனால் ஆத்திரப்படும் அஜய் திஷன் அந்த காரை துரத்தி சென்று காரை ஓட்டி வந்தவரிடம் சண்டை போடுகிறார்.

காதல் கதை: ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி அடிதடி வரை செல்கிறது. தனுஷா சண்டை வேண்டாம் சென்றுவிடுவோம் என எவ்வளவோ சொல்லியும், அஜய் சண்டையை நிறுத்தாததால், தனுஷா அவன் கன்னத்தில் அடித்து சண்டையை நிறுத்துகிறாள். இதனால் ஆத்திரமடைந்த அஜய், தனுஷாவை பதிலுக்கு அடிக்கிறான். இந்த சம்பவத்தை அப்பகுதியில் இருந்த சிலர் வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட, இருவருக்கும் இடையே பிரச்சனை மேலும் பெரிதாகிறது. இந்த சண்டையால் இவர்களின் காதல் என்ன ஆனது என்பது தான் பூக்கி படத்தின் கதை.
ஓடிடி ரிலீஸ் தேதி: காதலர்களுக்கு ஏற்றபடி காதலர் தினத்தன்று காதலர்கள் கொண்டாடும் திரைப்படமாக இப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது. தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி இப்படம் மார்ச் 13ந் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை தியேட்டரில் பார்க்க தவறவிட்டவர்கள் ஓடிடியில் பார்த்து மகிழலாம்.


Click it and Unblock the Notifications











