இத்தனை கோடியா? லைகர் திரைப்படத்தின் ஒடிடி உரிமம் என்ன விலைக்கு போயிருக்குதுன்னு தெரியுமா?

ஹைதராபாத்: விஜயதேவரகொண்டா, மைக் டைசன் மற்றும் அனன்யா பாண்டே நடிப்பில் உருவாகி உள்ள லைகர் திரைப்படத்தின் ஒடிடி உரிமம் அதிக தொகைக்கு விலை போயுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அர்ஜுன் ரெட்டி படம் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் விஜயதேவரகொண்டா.

தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் உருவாகி வரும் லைகர் திரைப்படம் தென்னிந்திய திரையுலகமே வாய்பிளந்து பார்க்கும் அளவுக்கு தற்போது இந்த படத்தின் பிசினஸ் நடைபெற்று வருகிறது.

லயன் பிளஸ் டைகர்

லயன் பிளஸ் டைகர்

தமிழில் சிங்கம்புலி என்று சொல்வதையே ஆங்கிலத்தில் லயன் பிளஸ் டைகர் என்கிற அர்த்தம் வரும் டைட்டிலுடன் வெறித்தனமாக உருவாகி உள்ளது விஜயதேவரகொண்டாவின் லைகர் திரைப்படம். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். இயக்குநர் புரி ஜெகநாத் இந்த படத்தை இயக்கி உள்ளார்.

அனன்யா பாண்டே

அனன்யா பாண்டே

சமீபத்தில் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியான தீபிகா படுகோனின் கெஹ்ரியான் திரைப்படத்தில் படுகவர்ச்சியாக நடித்த நடிகை அனன்யா பாண்டே தான் லைகர் படத்தில் விஜயதேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கெஹ்ரியான் படத்துக்காக அண்டர்வாட்டரில் பிகினி உடையில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகி வருகின்றன.

மைக் டைசன்

மைக் டைசன்

சாதாரண மும்பை வாலா எப்படி எம்எம்ஏ ஃபைட்டராக மாறுகிறான் என்கிற கதைதான் லைகர் படத்தின் கதை. தனுஷின் பட்டாசு படத்திலும் இதே போன்ற ஒரு கதை தான் சொல்லப்பட்டு இருந்தாலும், இந்த படத்தின் மேக்கிங் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள கதை என்பதால் நிஜ குத்துச்சண்டை வீரரான மைக் டைசனையே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளனர்.

ஒடிடி ரைட்ஸ்

ஒடிடி ரைட்ஸ்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இந்த படத்தின் போஸ்ட் தியேட்டரிக்கல் ரைட்ஸை அதிக தொகை கொடுத்து வாங்கி உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிகபட்சமாக 65 கோடி ரூபாய்க்கு லைகர் படத்தின் உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வாங்கி உள்ளதாம். இந்த தகவல் உண்மையாக இருந்தால் தென்னிந்திய மொழிப் படங்களிலேயே போஸ்ட் தியேட்டரிக்கல் ரைட்ஸுக்கு இவ்வளவு தொகைக்கு விற்கப்பட்ட முதல் படமாக லைகர் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தியேட்டர் ரிலீஸ் தேதி

தியேட்டர் ரிலீஸ் தேதி

விஜயதேவரகொண்டாவின் லைகர் திரைப்படம் நேரடியாக ஒடிடியில் வெளியாகவில்லை. இந்த ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியான பின்னர் தான் ஒடிடிக்கு வருகிறது. விஜய்தேவரகொண்டாவின் அதிரடி ஆக்‌ஷனை ரசிகர்கள் தியேட்டரிலும், அதன் பிறகு வீட்டில் குடும்பத்துடன் ஒடிடியிலும் கண்டு ரசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X