Kushi OTT release date: சமந்தாவுக்கு உண்மையாகவே சக்சஸ் கொடுத்ததா குஷி?.. அதுக்குள்ள ஓடிடிக்கு வருது!

சென்னை: Kushi OTT Release - நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் இந்த மாதம் செப்டம்பர் 1ம் தேதி வெளியான திரைப்படம் குஷி. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தனக்கு வெற்றிப் படமாக குஷி அமைந்தது என விஜய் தேவரகொண்டா படம் வெளியானதுமே கொண்டாடித் தீர்த்தார்.

ஆனால் இரண்டே வாரத்தில் அந்த படம் ஒட்டுமொத்தமாக வசூலில் ஸ்லோ டவுன் ஆகிவிட்டது. சுமார் 50 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 60 முதல் 70 கோடி வரைதான் வசூல் ஈட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vijay Deverakonda and Samantha Kushi movie OTT release date announced

100 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம்: குஷி படம் வெற்றி அடைந்து விட்டதாகவும் அந்தப் படத்தின் வெற்றியை 100 குடும்பங்களை குஷிப்படுத்தி கொண்டாடப் போவதாக விஜய தேவரகொண்டா அறிவித்திருந்தார். சுமார் 100 குடும்பங்களை தேர்வு செய்து தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப் போவதாகவும் அதற்காக ஒரு கோடி ரூபாயை செலவு செய்ய உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

படம் வெளியாகி 2 வாரங்கள் ஓடிய நிலையிலேயே செப்டம்பர் 15ம் தேதி 100 குடும்பங்களுக்கு ஒரு லட்சம் கொடுத்து விட்ட வீடியொவையும் வெளியிட்டு இருந்தார் விஜய் தேவரகொண்டா. ஆனால், குஷி திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு 100 கோடி கூட வசூல் வரவில்லை என்றே கூறுகின்றனர்.

சமந்தாவுக்கு சந்தோஷமில்லை: நடிகை சமந்தாவுக்கும் குஷி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையவில்லை. அவர் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படமே 50 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி இருந்தது. ஆனால், 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான குஷி திரைப்படத்தின் வசூல் மிகவும் குறைவு என்றும் இது ஹிட் அடிக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.

குஷி ஓடிடி ரிலீஸ் தேதி: இந்நிலையில், வரும் அக்டோபர் 1ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் குஷி திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என்கிற அறிவிப்பை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

காதலர்களும் புதிதாக திருமணமானவர்களும் ஜாலியாக பார்க்கும் படமாக குஷி திரைப்படம் உருவாகியிருந்த நிலையில், ஆரம்பத்தில் ரசிகர்கள் அந்த படத்திற்கு வரவேற்பை கொடுத்தனர். ஆனால் படத்தின் திரைக்கதை ரொம்பவே பிளாட்டாக இருந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பிறகு படத்தின் வேகம் ஒட்டுமொத்தமாக குறைந்துவிட்டது என்கின்றனர்.

ஓடிடியில் ரிலீசானால் தான் புதிய படங்களைப் பார்ப்பேன் என்னை ஒரு மாதம் வெயிட் பண்ணி ஓடிடியில் பார்க்கும் ரசிகர்களுக்காக ஒரே மாதத்தில் குஷி திரைப்படமும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X