OTT: விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் நடித்த ஃபேமிலி ஸ்டார்.. ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?
சென்னை: கீதா கோவிந்தம், சர்காரு வாரி பாட்டா படங்களை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் நடிப்பில் வெளியான ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகப் போகிறது. அதன் ஓடிடி ரிலீஸ் தேதி மற்றும் எந்த பிளாட்ஃபார்ம் என்பது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.
விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர், ஜகபதி பாபு, வெண்ணிலா கிஷோர், ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் ஏப்ரல் 5ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியானது.

விஜய் தேவரகொண்டா படங்களில் கதை பெரிதாக இல்லை என்றாலும் படம் பார்க்க அப்படியே பாலிவுட் படம் போல புரொடக்ஷன் வேல்யூ நிறைந்த படங்களாகவே உருவாகி வருகின்றன. அதனால், தியேட்டர் ரசிகர்களை திருப்திப்படுத்தாத ஃபேமிலி ஸ்டார் நிச்சயம் ஓடிடி ரசிகர்களை திருப்திப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புது புது நடிகைகள்: விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி படத்தில் ஷாலினி பாண்டேவுடன் நடித்திருந்தார். கீதா கோவிந்தம் படத்தில் ராஷ்மிகா மந்தனா, வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்தில் ராஷி கன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் நடித்தார். லைகர் படத்தில் அனன்யா பாண்டேவை ஹீரோயினாக்கினார். கடந்த ஆண்டு சமந்தாவை குஷி படத்தில் ஜோடியாக்கிய விஜய் தேவரகொண்டா இந்த ஆண்டு ஃபேமிலி ஸ்டார் படத்தின் மூலம் மிருணாள் தாகூருடனும் நடித்து விட்டார்.
ஃபிளாப் ஸ்டார்: விஜய் தேவரகொண்டா நடித்து வெளியான ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் முதல் பாதி நல்லா தான் இருந்தது. ஆனால், 2வது பாதியில் வெளிநாட்டுக்கு கதையை கொண்டு போய் இயக்குநர் பரசுராம் விஜய் தேவரகொண்டாவை மட்டுமல்ல நம்மையும் வச்சு செய்து விட்டார். கிரிஞ்ச் மேக்ஸ், பிலோ ஆவரேஜ் இது ஃபேமிலி ஸ்டார் இல்லை ஃபிளாப் ஸ்டார் என ரசிகர்கள் படத்தை ஒட்டுமொத்தமாக கழுவி ஊற்றினர்.

20 கோடி கூட வரல: ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் கடைசியாக 19.80 கோடி மட்டுமே பாக்ஸ் ஆபிஸில் வசூல் ஈட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள கில்லி படமே 20 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விஜய் தேவரகொண்டாவின் மார்க்கெட்டை மொத்தமாக இந்த படம் முடித்து விட்டுள்ளது.
ஓடிடி ரிலீஸ் எப்போ?: பரசுராம் இயக்கத்தில் வெளியான ஃபேமிலி ஸ்டார் திரைப்படத்தின் முதல் பாதி ரசிகர்களை கவரும் நிலையில், ஏப்ரல் 26ம் தேதி (நாளை) அந்த படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஓடிடியில் வெளியான பின்னராவது இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











