அயலி வெப்சீரிஸின் அந்த வசனம்.. அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றும் விஜய் ரசிகர்கள்.. என்ன ஆச்சு?
சென்னை: ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள அயலி வெப்சீரிஸ் அதன் அர்த்தமுள்ள சமூக அக்கறை மற்றும் பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரான கருத்துக்களால் பலரையும் கவர்ந்துள்ளது. அயலி வெப்சீரிஸில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வசனமும் செம ஷார்ப்பாக ஆணாதிக்க புத்தியை சவுக்கால் அடிப்பது போல உள்ளதாக நெட்டிசன்கள் பலரும் ட்வீட் போட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அந்த வெப்சீரிஸில் இடம்பெற்ற ஒரு சில வசனங்களை வைத்து விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றி வரும் சம்பவமும் சமூக வலைதளங்களில் அதிகரித்து வருகிறது.
இயக்குநர் முத்துக்குமார் கண்டிப்பாக ஒரு ஹார்ட்கோர் விஜய் ஃபேனாகத்தான் இருப்பார் என்றும் விஜய் ரசிகர்கள் அயலி வெப்சீரிஸை கொண்டாடி வருகின்றனர்.

மக்களை கவர்ந்த அயலி
தமிழ் சினிமாவில் சமீப காலமாக ஓடிடி வெப்சீரிஸ்கள் நல்ல தரத்துடன் நல்ல கதையம்சம் கொண்டும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு வெளியான விமலின் விடுதலை, ஐஸ்வர்யா ராஜேஷின் சுழல் மற்றும் எஸ்.ஜே. சூர்யாவின் வதந்தி உள்ளிட்ட வெப்சீரிஸ்கள் அதிகம் ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள அயலி வெப்சீரிஸும் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
சாட்டையடி வசனங்கள்
இயக்குநர் முத்துக்குமார் இயக்கத்தில் அபி நக்ஷத்ரா நடித்துள்ள இந்த வெப்சீரிஸ் நடிகர்களின் நடிப்பை தாண்டி சிறந்த வசனங்களுக்காக மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. "சட்டைப் போடாம நான் வெளியே போவேன்.. நீ போவியான்னு கேட்ட கும்பலன்ஸ் உங்களுக்கு தான்டா இந்த வெப்சீரிஸ் என அயலி வெப்சீரிஸின் காட்சிகளை ஷேர் செய்து வருகின்றனர்.
பொண்ணுங்க காலுக்கு இடையில தேடுறீங்க?
"எதுக்குயா ஊர் கவுரவத்த பொண்ணுங்க காலுக்கு இடையில தேடுறீங்க?? " என செம ஸ்ட்ராங்காக அயலி வெப்சீரிஸில் இடம்பெற்றுள்ள வசனத்தையும் அதிகம் ரசிகர்கள் பகிர்ந்து ஆணாதிக்கவாதிகளை வெளுத்து வாங்கி வருகின்றனர்.
முட்டா பைய ஊரு
தமிழ் வயதுக்கு வந்த விஷயத்தை தனது அம்மா மற்றும் ஊருக்கே மறைத்து வந்த நிலையில், அம்மா கண்டுபிடித்து விட இந்த ஊருக்கு தெரிஞ்சிடுச்சுன்னா என்ன பண்றது என கேட்கும் போது, இதுவே ஒரு முட்டா பைய ஊரு.. அன்னைக்கு வயசுக்கு வந்த போதே ஊர் முழுக்க நடந்து வந்தேன்.. இங்க் கறைன்னு சொன்னதும் நம்பிட்டானுங்க என விளாசி இருப்பார்.
அஜித் ரசிகர்களை கலாய்த்து
மேலும், அயலி படத்தில் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நெகட்டிவ் ரோலில் அசத்தியுள்ள டிஎஸ்ஆர் தர்மராஜ் தொடர்ந்து ஊர் கெளரவத்தை காப்பாற்ற வேண்டும் என பெண் பிள்ளைகள் 10ம் வகுப்பு செல்லவிடாமல் பார்த்துக் கொள்வதும், தமிழ் பல தடைகளை கடந்து 10ம் வகுப்பில் சேர்ந்த நிலையில், அந்த போர்ட்டில் தனது பெயர் வரவேண்டும் என பார்த்துக் கொண்டிருக்கும் போது, என்ன தான் ஊர்க்குருவி உயர உயர பறந்தாலும் பருந்தாக முடியாது என்பார், அப்போது தமிழ், "பறக்கிறது பத்தியெல்லாம் ஆமைக்கு என்ன சார் கவலை" என ஆசிரியரின் பட்டப் பெயரை வைத்து கிண்டல் செய்யும் காட்சி வீடியோவை ஷேர் செய்து விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











