Jana Nayagan OTT: சாதனை படைத்த தளபதியின் ஜன நாயகன் ஓடிடி வியாபாரம்.. ரிலீஸ் தேதியும் வந்துடுச்சே!
சென்னை: தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜன நாயகன். இந்த படம் தான் அவரது திரை வாழ்க்கையில் கடைசி படம் என்று அவரே தெரிவித்துவிட்டார். படம் வரும் ஜனவரி மாதம் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. அதற்கான வேலைகளும் நடைபெற்று வருகிறது. படத்தின் முதல் பாடல் வரும் 8ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக, அதாவது, சனிக்கிழமை ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் படத்தின் ஓடிடி வியாபாரம் குறித்தும் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜன நாயகன் படம் தளபதியின் 69வது படம். இந்த படம் தான் அவரது கடைசி படம் என்று தெரிவித்துவிட்டு, அரசியலில் களமிறங்கிவிட்டார், விஜய். இந்த படத்தை கே.வி. என் புரெடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தில் பூஜா ஹெக்டே, பிரியா மணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.

இந்த படம் தளபதி விஜய்யின் கடைசி படம் என்பதால், இந்த படத்தின் பிசினஸ் என்பது, அவரது வழக்கமான பிசினஸை விட தாருமாறாக உயர்ந்துள்ளது. அதாவது இந்த படத்திற்காக விஜய்க்கு ரூபாய் 225 கோடிகள் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமா நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறியுள்ளார் விஜய்.
ஓடிடி வியாபாரம்: இந்த படத்தின் ஓடிடி உரிமம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை வாங்க, இந்தியாவில் இருக்கும் முன்னணி ஓடிடி நிறுவனங்களான நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் நிறுவனங்கள் மிகவும் போட்டி போட்டுள்ளது. இதில் அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் ரூபாய் 121 கோடிகளுக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தமிழ் சினிமாவிலேயே இதுவரை வெளியான படங்களில் ஓடிடியில் அதிக விலைக்கு விற்பனையான படமாக உருவெடுத்துள்ளது.

ஓடிடி ரிலீஸ் தேதி: மேலும் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் என்பது படம் வெளியாகி 8 வாரங்களுக்குப் பின்னர்தான் ரிலீஸ் செய்யப்பட வேண்டும் என்றும் ஓடிடி உரிமம் விற்பனையின்போது ஒப்பந்தம் ஆகியுள்ளது என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழில் தக் லைஃப் படத்திற்கு 8 வாரத்திற்குப் பின்னரே ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்யவேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் படம் தியேட்டரில் மிகப்பெரிய தோல்விப் படமாக மாறியதால் 4 வாரங்கள் முடிந்ததும் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் ஜன நாயகன் படம், ஓடிடி தளத்தில், " மார்ச் மாதம் 6ஆம் தேதி ரிலீஸ்" ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











