Resort Web Series Review: எருமை சாணி விஜய் நடித்த ‘ரெசாட்’ வெப்சீரிஸ் விமர்சனம்.. வொர்த்தா? இல்லையா?

சென்னை: பிரவீன் பென்னட் இயக்கத்தில் எருமை சாணி யூடியூப் புகழ் விஜய் குமார் ராஜேந்திரன், தலைவாசல் விஜய், படவா கோபி உள்ளிட்ட பலர் நடித்த Resort வெப்சீரிஸ் கடந்த மார்ச் 13ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியானது. அசோக் செல்வனின் தீனி, நயன்தாராவின் அன்னபூரணி படங்கள் வரிசையில் சமையல் கலையை மையமாக வைத்து ரெசாட் பேக்கிரவுண்டில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் தான் இது.

நெடுமாறன் எனும் தலை சிறந்த சமையல் கலைஞராக தலைவாசல் விஜய் நடித்துள்ளார். ஆனால், நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஸ்ட்ரிக்ட் ஸ்ட்ரிக்ட் என்பது போல வில்லத்தனமான கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார்.

Vijay Kumar Rajendran s Resort Web Series Review in Tamil
Photo Credit:

எருமை சாணி யூடியூப் சேனலில் ஜாலியாக வீடியோக்களை போட்டு வந்த விஜய் குமார் ராஜேந்திரன் அருள்நிதியை வைத்து D ப்ளாக் படத்தை இயக்கினார். ஆனால், அந்த படம் சரியாக போகவில்லை. இந்நிலையில் அவர் ஹீரோவாக நடித்துள்ள ரெசாட் வெப்சீரிஸ் எப்படி இருக்கு என்பது குறித்த விமர்சனத்தை விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க..

ரெசாட் வெப்சீரிஸ் கதை: தமிழில் தொடர்ந்து நல்ல நல்ல வெப்சீரிஸ்கள் வெளியாகி வருகின்றன. யோகி பாபு நடித்த சட்னி சாம்பார் வெப்சீரிஸ் கடந்த ஆண்டு வெளியாகி ஓடிடி ரசிகர்களை போரடிக்காமல் பார்க்க வைத்தது. அந்த வரிசையில் ரெசாட் வெப்சீரிஸ் வெளியாகி உள்ளது.

தனது மகளாக இருந்தாலும் சமையல் அறையில் தப்பு செய்தால் தண்டனை கொடுக்கக் கூடிய அளவுக்கு ஸ்ட்ரிக்ட்டான மாஸ்டர் செஃப் ஆக இருக்கும் நெடுமாறன் (தலைவாசல் விஜய்) RR ரெசாட்டில் தலைமை சமையல் கலைஞராக உள்ளார். தன்னுடைய கிச்சனுக்கு தான் மட்டும் தான் ராஜா என்றும் ரெசாட் மேனேஜராக இருந்தாலும் உள்ளே அனுமதி கிடையாது என கம்பீரமாக நடித்துள்ளார். கடன் வாங்கி வைத்து விட்டு ஓடிப்போன அப்பாவால் குடும்ப கஷ்டத்தை போக்க சாதாரண வெயிட்டர் வேலைக்குச் சேர்கிறார் வெற்றி (விஜய் குமார் ராஜேந்திரன்). நன்றாக சமைக்கத் தெரிந்த அவர் 1500 ரூபாய் மதிப்புள்ள நெடுமாறனின் சீக்ரெட் சூப்பை தள்ளு வண்டி கடையில் இரவு நேரம் செய்யும் பார்ட் டைம் கடையில் 30 ரூபாய்க்கு விற்க, ஒரு நாள் மாட்டிக் கொள்கிறார்.

Vijay Kumar Rajendran s Resort Web Series Review in Tamil
Photo Credit:

அதன் பின்னர் இவர் ஆசைப்பட்டதை போல அந்த ரெசாட்டில் உள்ள கிச்சனுக்குள் நுழைந்து செஃப்பாக கலக்கினாரா? அல்லது இவரது வேலையை நெடுமாறன் பறித்தாரா? என்பது தான் மீதிக் கதை.

பார்க்கலாமா? வேண்டாமா?: ஜாலியாக டைம் பாஸ் பண்ண பக்காவான ஓடிடி வெப்சீரிஸாக இந்த ரெசாட் நீட் ஆக உருவாக்கப்பட்டுள்ளது. விஜய்யோட யதார்த்தமான நடிப்பு மற்றும் தலைவாசல் விஜய் அந்த பக்கம் தனது தேர்ந்த நடிப்பை கொடுத்து ரசிக்க வைக்கிறார். விஜய்யின் நண்பராக வரும் நடிகர் பல இடங்களில் சிரிக்க வைக்கிறார். ஹீரோயின் கதாபாத்திரம் எல்லாம் சுமார் ரகம் தான். பெரிதாக எதிர்பார்த்து எல்லாம் இந்த வெப்சீரிஸை பார்க்க நினைத்தால் பல்பு தான். ஜாலியா டைம் பாஸ் பண்ண பார்க்க நினைத்தால் கண்டிப்பாக ஏமாற்றாது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X