Thalapathy 68: விஜய்யின் தளபதி 68 OTT ரைட்ஸ்... ஷூட்டிங் தொடங்கும் முன்பே 100 கோடி பிஸினஸ்!
சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. ஆனால், அதற்குள்ளாகவே தளபதி 68 ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் பல கோடிகள் கொடுத்து வாங்கிவிட்டதாம்.

தளபதி 68 ஓடிடி ரைட்ஸை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்: கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய்யின் வாரிசு, இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது லியோ படத்தில் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. லியோ படத்தின் ரிலீஸுக்கு முன்பே தனது 68வது படம் குறித்து விஜய்யே அபிஸியலாக அப்டேட் கொடுத்திருந்தார்.
அதன்படி, விஜய்யின் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்காக சமீபத்தில் தான் அமெரிக்கா சென்று திரும்பினார் விஜய். மேக்கப் டெஸ்ட், பாடி ஸ்கேனிங் என தளபதி 68 பயணம் அமெரிக்காவில் இருந்து தொடங்கியுள்ளது. இதனால், இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக லியோ படத்தை விடவும், தளபதி 68 மீதான எதிர்பார்ப்பு கோலிவுட்டையே வியக்க வைத்துள்ளது.
லியோ ரிலீஸானதும் தளபதி 68 படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி நவம்பரில் தொடங்கும் லியோ ஷூட்டிங், அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என எதுவுமே வெளியாகவில்லை என்றாலும், ப்ரீ-ரிலீஸ் பிஸினஸ் இப்போதே தொடங்கிவிட்டதாம். முதலாவதாக தளபதி 68 ஓடிடி உரிமை விற்பனையாகிவிட்டதாக சொல்லப்படுகிறது.
விஜய்யின் படங்களுக்கு தியேட்டரில் நல்ல ஓபனிங் இருப்பதால், ஓடிடி ரைட்ஸ் வாங்குவதிலும் முன்னணி நிறுவனங்கள் போட்டிப் போட்டு வருகின்றன. அதன்படி, தளபதி 68 ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளதாம். முக்கியமாக இந்த ஓடிடி ரைட்ஸ் பிஸினஸ் 150 கோடி ரூபாய் வரை நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்பே 100 கோடிக்கும் மேல் வசூலித்துவிட்டது தளபதி 68.
அதேநேரம் ஓடிடி ரைட்ஸை தொடர்ந்து சாட்டிலைட் உரிமை, ஆடியோ ரைட்ஸ் ஆகியவையும் கோடிகளில் விற்பனையாகும் எனத் தெரிகிறது. அதற்கான பேச்சுவார்த்தையிலும் தயாரிப்பு நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறதாம். பிரம்மாண்டமாக உருவாகவுள்ள தளபதி 68 படத்தின் ப்ரீ-ரிலீஸ் பிஸினஸ், இப்போதே கோடிகளில் நடைபெற்று வருவது கோலிவுட்டையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











