ரிலீஸுக்கு முன்பே 250 கோடி வசூலித்த LEO... பாக்ஸ் ஆபிஸை பதற வைக்கும் விஜய் - லோகேஷ் காம்போ!
சென்னை: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
தளபதி 67 என்ற பெயரில் தொடங்கிய லியோ படத்தின் டைட்டில் ப்ரோமோ வீடியோ நேற்று முன்தினம் வெளியானது.
இந்தத் திரைப்படம் கோலிவுட் மட்டும் இல்லாமல் இந்திய திரையுலகிலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ள லியோ ரிலீஸுக்கு முன்பே 250 கோடி ரூபாய் வசூலித்து பாக்ஸ் ஆபிஸை பதற வைத்துள்ளது.

வேகமெடுத்த லியோ ஷூட்டிங்
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தளபதி 67 படத்தின் அப்டேட் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து வெளியானது. முதற்கட்டமாக எந்தெந்த நடிகர்கள், நடிகைகள் கமிட் ஆகியுள்ளனர் என்பதை படக்குழு வெளியிட்டது. அதேநேரம் படக்குழுவினர் அனைவரும் மொத்தமாக ஒரே ஸ்பைஸ் ஜெட்டில் காஷ்மீருக்கும் பறந்தனர். இறுதியாக தளபதி 67 டைட்டில் லியோ என்ற அறிவிப்பும் ப்ரோமோ வீடியோவுடன் வெளியானது. அடுத்தடுத்து அப்டேட் கொடுத்த லியோ டீம் தற்போது காஷ்மீர் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டனர்.

அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ்
லியோ டைட்டில் ப்ரோமோவுடன் படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இந்தப் படம் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இனி அடுத்தடுத்து லியோ படத்தின் அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். முக்கியமாக இந்தப் படம் லோகேஷ் யுனிவர்ஸாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இதனால் லியோ படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

ரிலீஸுக்கு முன்பே 250 கோடி வசூல்
செவன் ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோஸ் தயாரித்து வரும் லியோ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது. அதேபோல் ஓடிடி ரைட்ஸ் நெட்பிளிக்ஸ் வசம் சென்றுவிட்டது. லியோ சாட்டிலைட் ரைட்ஸ் 80 கோடிக்கும், ஓடிடி ரைட்ஸ் 150 கோடி ரூபாய்க்கும், மியூசிக் ரைட்ஸ் ரூ.16 கோடிக்கும் விற்பனையாகியுள்ளதாம். ஆகமொத்தம் லியோ திரைப்படம் ரிலீஸாகும் முன்பே 246 கோடிக்கு விற்பனையாகி கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது. இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட் 250 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இண்டஸ்ட்ரி ஹிட் கன்ஃபார்ம்
லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் 500 கோடிக்கும் வசூலித்ததோடு, ஓடிடி ஸ்ட்ரீமிங்கிலும் பல மில்லியன் வீயூஸ்களை கடந்தது. இதனால் தற்போது உருவாகும் லியோ படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ், ஓடிடி ரைட்ஸும் அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளதாம். ப்ரீ-ரிலீஸ் பிஸினஸில் 200 கோடியை கடந்த லியோ, தியேட்டரில் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுப்பது கன்ஃபார்ம் என சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்தப் படம் லோகேஷ் யுனிவர்ஸ் தான் என்பது உறுதியானால், இனி அடுத்து அவர் இயக்கும் படங்களுக்கும் செம்ம மார்க்கெட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











